»   »  அடுத்தும் நாமதான் படம் பண்றோம்! - விவேகம் சிவாவுக்கு அஜித் கொடுத்த ஆறுதல்!

அடுத்தும் நாமதான் படம் பண்றோம்! - விவேகம் சிவாவுக்கு அஜித் கொடுத்த ஆறுதல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜித் படங்களில் பில்லா 2-க்குப் பிறகு மோசமாக விமர்சிக்கப்பட்ட படம் விவேகம்தான். பில்லா 2 படத்துக்கு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்த பல ரசிகர்கள் பெரும் நஷ்டப்பட்டார்கள். அதற்குப் பிறகு, அதை விட மோசமான நஷ்டம் விவேகத்துக்குதான். தல படம்... எப்படியும் நாலு மடங்கு லாபம் பாத்துடலாம் என பல ரசிகர்கள், தியேட்டர்களில் முதல் காட்சியை குத்தகைக்கு எடுத்து நான்கைந்து மடங்கு அதிக விலை வைத்து டிக்கெட் விற்றார்கள்.

ஆனால் அதிகாலைக் காட்சியின் முடிவுகள் தெரிந்துவிட்டதால், வந்த விலைக்கு டிக்கெட்டுகளைத் தள்ளிவிட வேண்டிய நிலைமைக்கு வந்தார்கள். இன்னொரு பக்கம் சமூக வலைத் தளங்களில் படத்தை அப்படி ஓட்டினார்கள்.

Ajith to join again with Siva

இதெல்லாம் கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் கூத்து. ஆனாலும் சில இடங்களில், குறிப்பாக சென்னையில் முதல் வார வசூல் ஏக திருப்தி என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். கோவையில் மிகப் பெரிய வசூலைப் பெற்றுள்ளதாம் விவேகம். வார நாட்களில் கூட நல்ல கூட்டம் என்கிறது பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்.

எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் அஜித். எதற்கும் அவர் ரியாக்ட் பண்ணவே இல்லை. நேற்று விவேகம் இயக்குநர் சிவாவை வீட்டுக்கு அழைத்திருக்கிறார். அவரிடம், "எதிர்மறை விமர்சனங்கள் கண்டு கலங்க வேண்டும். அதைக் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வோம். அடுத்த படத்திலும் நாம்தான் இணைகிறோம். கதையை ரெடி பண்ணுங்க.. அதுல பதில் சொல்லலாம்...", என்றாராம்.

சிவாவுக்கு ஆனந்தக் கண்ணீர்... அடுத்த வி டைட்டில் ரெடி!

English summary
Ajith has assured another chance to Director Siva aftert Vivegam

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil