பாங்காக் பார்த்ததுமே அந்த ஆசை வந்துடுச்சாம்.. மீண்டும் பைக்கை எடுத்துட்டு கிளம்ப போறாரா அஜித்?

சென்னை: இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித் மீண்டும் ஒரு பைக் டூர் செய்யப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க ஆரம்பித்த நடிகர் அஜித் அதே டீம் உடன் வலிமை மற்றும் துணிவு என தொடர்ந்து 3 படங்களில் பணியாற்றி வருகிறார்.

பாங்காக்கில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித் அங்கேயும் பைக் டிராவல் செய்யப் போகிறாராம்.

அஜித்தின் துணிவு

அஜித்தின் துணிவு

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நெகட்டிவ் ஷேடில் நடித்து வரும் துணிவு படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருவதாக தகவல்கள் லீக் ஆகின. அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் ஹைதராபாத்தில் போடப்பட்ட எஸ்பிஐ பேங்க் செட்களும் இணையத்தில் கசிந்தன.

தீபாவளி ரிலீஸ் இல்லை

தீபாவளி ரிலீஸ் இல்லை

இந்த ஆண்டு தொடக்கத்தில் வலிமை படம் வெளியாகி வசூல் வேட்டை ஆடினாலும், விமர்சன ரீதியாக படம் சொதப்பியது. இந்நிலையில், உடனடியாக தீபாவளிக்கே அடுத்த தரமான சம்பவத்தை பண்ணலாம் என அஜித் அதிரடி முடிவெடுத்து டபுள் கால்ஷீட் எல்லாம் போட்டு நடித்து வந்தாலும், ஃபைனான்ஸ் பிரச்சனை காரணமாக இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாக வாய்ப்பில்லை அடுத்த ஆண்டு தள்ளிப் போகும் எனக் கூறப்படுகிறது.

பைக் டூர்

பைக் டூர்

படத்தின் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், நடிகர் அஜித் ஐரோப்பா நாடுகளுக்கு பைக்கில் மிகப்பெரிய டூர் அடிக்க தனது டீம் உடன் புறப்பட்டுச் சென்றார். லண்டன் கடைகளில் அஜித் செல்லும் காட்சிகள் எல்லாம் வெளியாகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை கிளப்பின. அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்ட நிலையில், இமய மலைக்கு மஞ்சு வாரியர் உடன் பைக் டூர் கிளம்பினார் அஜித்.

பேங்காக் பார்த்ததும் ஆசை

பேங்காக் பார்த்ததும் ஆசை

இந்நிலையில், துணிவு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக பாங்காக் சென்றுள்ள நடிகர் அஜித், அந்த ஊரின் சாலைகளை பற்றி அறிந்ததும் அங்கேயும் பைக் டூர் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தற்போது சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

துணிவு என்ன ஆகும்

துணிவு என்ன ஆகும்

நடிகர் அஜித் மறுபடியும் பைக் டூர் கிளம்பி விட்டால், துணிவு படம் எப்போ தான் வரும் என்கிற அச்சம் ரசிகர்களுக்கு எழத்தான் செய்யும். ஆனால், இந்த முறை துணிவு படத்தை முழுமையாக முடித்து விட்டுத் தான் பாங்காக்கில் பைக் டூர் செய்யப் போகிறார் என கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது அடுத்த செட் பைக் டூர் போட்டோக்கள் வந்தால் தான் தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X