Thunivu Second Look: சும்மா அட்டகாசமா இருக்காரே அஜித்.. தெறிக்கவிடும் துணிவு செகண்ட் லுக் போஸ்டர்!
சென்னை: போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செப்டம்பர் 21ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியான நிலையில், செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
காதில் கடுக்கண், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வெள்ளை சட்டை அணிந்து கொண்டு கீழே குனிந்து பார்த்து லுக் விடுவது போல இந்த போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

அஜித்தின் துணிவு
ஏகே 61 என அழைக்கப்பட்டு வந்த அஜித்தின் 61வது படத்திற்கு துணிவு என்கிற டைட்டிலை இயக்குநர் ஹெச். வினோத் சூட்டியுள்ளார். அஜித்தின் துணிவு படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செப்டம்பர் 21ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகி சோஷியல் மீடியாவையே தெறிக்க விட்டது.

செகண்ட் லுக் தெறிக்குது
இந்நிலையில், தற்போது அஜித்தின் துணிவு படத்தின் செகண்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கை விட செகண்ட் லுக் தாறுமாறாக இருக்கிறது என அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். No Guts No Glory என்கிற வாசகம் போஸ்டரில் அட்டகாசமான இடத்தில் அமைந்திருப்பது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஆக்ஷனுக்கு ரெடி
நடிகர் அஜித் நெகட்டிவ் ஷேடில் தெறிக்க விட ரெடியாகி விட்டார் என்பதை ஆணித்தரமாக தற்போது வெளியாகி உள்ள செகண்ட் லுக் உறுதியாக சொல்கிறது. ஃபர்ஸ்ட் லுக் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், அஜித்தின் செகண்ட் லுக்கை பார்த்து விஜய் ரசிகர்களே பாராட்டி வருகின்றனர்.

3வது லுக் எப்போ
நடிகர் விஜய்யின் வாரிசு படத்தை போலவே அஜித்தின் துணிவு படத்தின் 3 போஸ்டர்கள் வெளியாகும் என தகவல்கள் கசிந்த நிலையில், 2வது போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இன்று மாலை 3வது போஸ்டரும் வெளியாக உள்ளதாக சூப்பர் அப்டேட்கள் கிடைத்துள்ளன.

அஜித் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட்
ஒரு அப்டேட் ஆவது தயாரிப்பாளர் போனி கபூர் தர மாட்டாரா என அவர் எந்த ட்வீட் போட்டாலும் கழுவி ஊற்றி வந்த அஜித் ரசிகர்களை சந்தோஷக் கடலில் ஆழ்த்தி உள்ளார் போனி கபூர். ஒன்றுக்கு மூன்று லுக் விட்டு ட்ரிபிள் ட்ரீட் கொடுக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போதைக்கு இரண்டு லட்டுகளுடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புக்காகவும் டீசர் வெளியீட்டுக்காகவும் அஜித் ரசிகர்கள் வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications











