»   »  தல 57: அஜீத்-சிவா படப்பிடிப்பு ஜூலையில் துவக்கம்?

தல 57: அஜீத்-சிவா படப்பிடிப்பு ஜூலையில் துவக்கம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கவிருக்கும் தல 57 படத்தின் படப்பிடிப்பு, வருகின்ற ஜூலை மாதம் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'வீரம்', 'வேதாளம்' படங்களைத் தொடர்ந்து 3 வது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கவிருக்கிறார்.

ஏற்கனவே 2 ஹிட் கொடுத்துள்ளதால் அஜீத்-சிறுத்தை சிவா 3 வது முறையாக இணையும் இப்படத்திற்கு, அஜீத் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

வீரம்

வீரம்

'வீரம்' படத்தில் அண்ணன்-தம்பி பாசம், 'வேதாளம்' படத்தில் அண்ணன்-தங்கை பாசம் என 2 படங்களிலும், அஜீத்தை பாசக்கார அண்ணனாக சிறுத்தை சிவா காட்டியிருந்தார். சிறுத்தை சிவா இயக்கிய 2 படங்களுமே ஹிட்டானதில், அஜீத்தின் 57 வது படத்தை இயக்கும் வாய்ப்பும் அவருக்கே கிடைத்திருக்கிறது.

அனிருத்

அனிருத்

சத்யஜோதி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. 'ஆலுமா டோலுமா' என அஜீத் ரசிகர்களை ஆடவிட்ட அனிருத்தையே இப்படத்திற்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வெற்றி ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

அஜீத் மற்றும் படக்குழு நாளை (வியாழக்கிழமை) சந்தித்து இப்படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதாகவும், ஜூலை முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிக, நடிகையர்

நடிக, நடிகையர்

இப்படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்யும் பணி, தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறதாம்.

அனுஷ்கா,நயன்தாரா, தமன்னா இவர்களில் ஒருவர் அஜீத்தின் ஜோடியாக நடிக்கலாம் என்று தகவல்கள் அடிபடுகின்றன. இதில் யாரை சிறுத்தை சிவா தேர்வு செய்யப்போகிறார் என அஜீத் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் தல 57 குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources said Siruthai Siva- Ajith's Thala 57 Shooting Begins from July.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil