Don't Miss!
- News
"வரி குறைப்பு வரவேற்க கூடியதுதான்.." பட்ஜெட் குறித்து எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து
- Sports
"இன்னும் ஒரே ஒரு போட்டிதான்.. சுப்மன் கில்லால் இந்தியாவுக்கு ஆபத்து".. பாக். சீனியர் எச்சரிக்கை!
- Finance
பட்ஜெட் 2023: உங்க சம்பளத்துக்கு வரிச் சேமிப்பு எவ்வளவு..? புட்டு புட்டு வைக்கும் தகவல்..!
- Lifestyle
தாய்மார்களே! உங்க குழந்தைக்கு பாலோடு இந்த பழங்களை சேர்த்து சாப்பிட கொடுக்கவே கூடாதாம்..ஏன் தெரியுமா?
- Automobiles
சிஎம் பேரனா இருந்தாலும் தப்பிக்க முடியாது! இத்தன லட்சம் கார்களை அழிக்க போறாங்களா! திடீர் அதிரடியால் கலக்கம்!
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ப்ரீ ரிலீஸ் பிஸினஸில் அடித்து நொறுக்கிய துணிவு... அஜித்தின் விஸ்வரூபத்தால் கலங்கிய வாரிசு!
சென்னை: அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகவுள்ளது.
ஹெச் வினோத் இயக்கத்தில் ஆக்ஷன் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள துணிவு, அஜித்துக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் அவரது படங்களுக்கான ப்ரோமோஷனலில் கலந்துகொள்ளாத நிலையில், துணிவு பிஸினஸ் குறித்து செய்திகள் வெளியாகி கொண்டே இருந்தன.
இதனிடையே தற்போது துணிவு திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
வாரிசுக்குப் போட்டியாக துணிவு திருவிழா... போஸ்டர்களில் வெறித்தனம் செய்த அஜித் ரசிகர்கள்

ஆக்ஷன் ட்ரீட்டுக்கு ரெடியான அஜித்
கோலிவுட்டின் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் அஜித், தற்போது துணிவு படத்தில் நடித்துள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை என தொடர்ச்சியாக அவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் துணிவு படம் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ளதால், துணிவு ரிசல்ட் எப்படி இருக்கும் என பெரிய விவாதமே நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தப் படம் தரமான ஆக்ஷன் ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

ப்ரீ தியேட்டர் பிஸினஸ்
இதனிடையே அஜித் எப்போதும் தனது படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கிடையாது. அதேபோல் துணிவு படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொள்ள மாட்டேன் என அறிவித்துவிட்டார். அதேநேரம், விஜய்யின் வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே அஜித்தின் துணிவு - விஜய்யின் வாரிசு என்ற போட்டி இணையத்தை கலங்கடித்து வருகிறது. இதனால் துணிவு படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், துணிவு படத்தின் ப்ரீ தியேட்டர் ரிலீஸ் பிஸினஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் விஸ்வரூபம்
தொடர்ச்சியாக அஜித்தின் படங்கள் தோல்வியை தழுவினாலும், துணிவு பிஸினஸ் தாறுமாறாக நடந்துள்ளதாம். அஜித் சம்பளம் 70 கோடி உட்பட படத்தின் மொத்த பட்ஜெட் 160 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு தியேட்டர் உரிமை 60 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம். அதேபோல் கேரளா தியேட்டர் ரைட்ஸ் 2.50 கோடி ரூபாய், கர்நாடகா தியேட்டர் உரிமை 3.50 கோடி ஆந்திரா, தெலங்கானா உரிமை 1.50 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தி டப்பிங் ரைட்ஸ் 25 கோடி ரூபாய் வரை விலை போயுள்ளதாம்.

கலக்கத்தில் விஜய்யின் வாரிசு
அதேபோல், வெளிநாட்டு தியேட்டர் உரிமை 14 கோடி ரூபாய்க்கும், ஆடியோ ரைட்ஸ் 2 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் 70 கோடி ரூபாய்க்கும், சாட்டிலைட் ரைட்ஸை கலைஞர் டிவி 20 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாம். இதனால் துணிவு திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே மொத்தம் 200 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விஜய்யின் வாரிசு படக்குழு கலக்கத்தில் உள்ளதாம். பொங்கல் ரேஸில் வாரிசு தான் சூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அஜித்தின் துணிவு ப்ரீ ரிலீஸ் பிஸினஸில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.