Don't Miss!
- News
"சலங்கை ஒலி" இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்.. சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாரிசு ஆடியோ ரிலீஸுக்குப் போட்டியாக கெத்து காட்டப் போகும் அஜித்... மெர்சலான விஜய் ரசிகர்கள்!
சென்னை: அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வரவிருக்கிறது.
ஹெச் வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, பிக் பாஸ் அமீர், பாவ்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதனிடையே, விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளதால், இருதரப்பு ரசிகர்களிடமும் பலத்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
பிடிவாதத்தில் பாலா... மீண்டும் தொடங்கும் வணங்கான்... சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்?

காத்திருக்கும் துணிவு அப்டேட்
அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வங்கியில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் கேங்ஸ்டர் கேரக்டரில் அஜித் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், படம் முழுக்க அஜித் ரசிகர்களுக்கான ஆக்ஷன் ட்ரீட் கன்ஃபார்ம் என்றும் துணிவு படக்குழு தரப்பில் இருந்து அப்டேட் கிடைத்துள்ளது.

பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு
இதனிடையே பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஒன்மேன் ஆர்மியாக பொங்கல் ரேஸில் களமிறங்கி வசூலை தட்டித் தூக்கிவிடலாம் என நினைத்தது வாரிசு டீம். ஆனால், இப்போது அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாவதால், வாரிசு தயாரிப்பாள தில் ராஜூ கலக்கத்தில் இருக்கிறாராம். இன்னொரு பக்கம் வாரிசு, துணிவு படங்களுக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முக்கியமாக வரும் 24ம் தேதி வாரிசு ஆடியோ ரிலீஸ் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

கெத்து காட்டப் போகும் அஜித்
வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா குறித்து, அதனை தொகுத்து வழங்கவுள்ள பிக் பாஸ் ராஜூ டிவிட்டரில் அப்டேட் கொடுத்திருந்தார். பின்னர் அந்த டிவிட்டர் போஸ்ட்டை அவர் டெலிட் செய்துவிட்டார். ஆனாலும் அவர் சொன்ன 24ம் தேதியில் தான் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும் என தெரிகிறது. இதனால் அதே தேதியில் அஜித்தும் கெத்து காட்ட ரெடியாகியுள்ளாராம். அதன்படி துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிளை ரிலீஸ் செய்யவுள்ளதாம் படக்குழு. முக்கியமாக இந்தப் பாடலின் டைட்டில் தான், விஜய் ரசிகர்களை மெர்சலாக்கியுள்ளது.

24ம் தேதி மாலை சம்பவம் இருக்கு
துணிவு படத்தில் இருந்து ஏற்கனவே சில்லா சில்லா, காசேதான் கடவுளடா என இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மூன்றாவது பாடல் வரும் 24ம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாடலுக்கு 'கெத்து' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாரிசு ஆடியோ ரிலீஸ் நடைபெறும் அதேநாள், அதே நேரத்தில் துணிவு 3வது சிங்கிள் ரிலீஸாகவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வாரிசு படத்தில் இருந்தும் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகிவிட்டாலும், அஜித்தின் சில்லா சில்லா சாங் தான் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் விஜய் ரசிகர்கள் மெர்சலாகவும் காரணம் என கூறப்படுகிறது.