Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- News
"சலங்கை ஒலி" இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்.. சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அதிரடியாக ரிலீஸாகும் துணிவு ட்ரெய்லர்... கலக்கத்தில் வாரிசு டீம்... அஜித் கேரக்டர் தான் மேட்டரா?
சென்னை: அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள துணிவு படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகிறது.
முன்னதாக துணிவு படத்தின் கேரக்டர்கள் பற்றியும் அதில் யார் நடித்துள்ளனர் என்பதையும் படக்குழு நேற்று அறிவித்தது.
அஜித்தின் கேரக்டர் என்னவென்பதை மட்டும் படக்குழு ரகசியமாக வைத்துள்ள நிலையில், தற்போது அதுபற்றியும் தகவல் கிடைத்துள்ளது.
சில்லா..சில்லா..கெத்துக்காட்ட வருது துணிவு டிரைலர்..புத்தாண்டுக்கு தரமான சம்பவம் லோடிங்!

அஜித்தின் துணிவு
2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கோலிவுட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கப் போகிறது. அஜித் நடித்துள்ள துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் பொங்கலை குறிவைத்து வெளியாகின்றன. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு, முழுக்க முழுக்க ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ளது. மேலும், அஜித் - ஹெச் வினோத் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

துணிவு ட்ரெய்லர் ரிலீஸ்
எப்போதுமே அஜித் படங்களின் அப்டேட் லேட்டாக தான் வரும் என ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருந்தனர். இந்த முறையும் விஜய்யின் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தான் முதலில் வெளியானது. துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் சில்லா சில்லா இதோ அதோ என சொல்லி சொல்லி, ரொம்பவே லேட்டாக வெளியானது. ஆனால், அடுத்தடுத்து செகண்ட் சிங்கிள், மூன்றாவது பாடல்களையும் களமிறக்கியது துணிவு டீம். இதையெல்லாம் விட அதிரடியாக இன்று மாலை துணிவு ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. இன்னும் விஜய்யின் வாரிசு ட்ரெய்லர் ரிலீஸாகாத நிலையில், துணிவு ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் கேரக்டர் இதுதானா?
விஜய்யின் வாரிசு ட்ரெய்லருக்கு டஃப் கொடுக்க வேண்டும் என்றே, துணிவு படத்தின் ட்ரெய்லர் அவசரமாக ரிலீஸாவதாக அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்னொரு பக்கம் துணிவு படத்தில் அஜித்தின் கேரக்டர் என்னவென்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நேற்றைய தினம் துணிவு படத்தின் கேரக்டர்கள் பற்றி படக்குழு அறிவிப்பு வெளியிட்டது. மஞ்சு வாரியர் கண்மணி என்ற கேரக்டரிலும், சமுத்திரகனி தயாளன் என்ற போலீஸ் பாத்திரத்திலும் நடித்துள்ளனர். அதேபோல், பிரேம், ஜிஎம் சுந்தர், அஜய், வீரா, ஜான் கோக்கேன், பக்ஸ் உள்ளிட்டோரின் கேரக்டரின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன.

அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
இதனைத் தொடர்ந்து இன்று துணிவு ட்ரெய்லர் வெளியாகும் போது அஜித்தின் கேரக்டரும் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. அதன்படி இந்தப் படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் அந்தோணி என்றும், மிரட்டலான நெகட்டிவ் ரோலில் ந்டித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மங்காத்தா படத்திற்குப் பின்னர் அஜித்தின் கேரக்டர் இதில் செம்ம மாஸாக இருக்கும் எனவும், இது ரசிகர்களுக்கான ஃபேன் பாய் சம்பவம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் வாரிசு பேமிலி எண்டர்டெயின்மெட்டாக உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அஜித்தின் துணிவு கண்டிப்பாக ஆக்சன் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், துணிவு படத்தின் ட்ரெய்லரை எதிர்பார்த்துள்ள ரசிகர்கள், ட்விட்டரில் 'துணிவுட்ரெய்லர்' என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.