»   »  இன்று நள்ளிரவில் வெளியாகிறது வேதாளம் டீசர்

இன்று நள்ளிரவில் வெளியாகிறது வேதாளம் டீசர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நள்ளிரவில் வேதாளம் படத்தின் டீசர் வெளியாகிறது என்று படக்குழுவினர் அறிவித்து இருக்கின்றனர். மேலும் இந்தத் தகவலை அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவும் உறுதிபடுத்தி இருக்கிறார்.

இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வேதாளம் படத்தின் டீசரை யூடியூபில் வெளியிடவிருக்கின்றனர். கடந்த வாரம் டீசர் வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தை சந்தித்தனர்.

எனவே இந்தமுறை வீண் வதந்திகளுக்கு இடமின்றி படத்தின் டீசர் வெளியீட்டை முறையாக அறிவித்திருக்கின்றனர். இதனால் உற்சாகம் அடைந்த அஜீத் ரசிகர்கள் தற்போது #VedalamTeaserStormOntheWay என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரை ஒருவழி பண்ணி வருகின்றனர்.

வேதாளம்

வேதாளம்

சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் வேதாளத்தில் அஜீத்துடன் இணைந்து ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், அஸ்வின், சூரி மற்றும் வித்யுலேகா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது.

பர்ஸ்ட் லுக்

பர்ஸ்ட் லுக்

கடந்த மாதம் படத்தின் தலைப்புடன் இணைந்து பர்ஸ்ட் லுக்கை வேதாளம் படக்குழுவினர் வெளியிட்டனர். இது அஜீத் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படியொரு தலைப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை எனினும் அஜீத் நடிப்பில் தலைப்பும் மாஸாக மாறும் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

புலி படத்துடன்

புலி படத்துடன்

கடந்த 1 ம் தேதி புலி படத்துடன் வேதாளம் படத்தின் டீசரும் வெளியாகும் என்று எழுந்த வதந்திகளால் ரசிகர்கள் நள்ளிரவு வரை ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் மறுநாள் விடிந்தும் கூட படத்தின் டீசர் பற்றிய எந்தத் தகவலையும் படக்குழுவினர் வெளியிடவில்லை.

இன்று நள்ளிரவு

இந்நிலையில் இன்று இரவு படத்தின் டீசர் வெளியாகும் என்று படத்தின் ஆடியோ ரைட்ஸை வாங்கியிருக்கும் சோனி மியூசிக் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

சுரேஷ் சந்திரா

சோனி மியூசிக்கின் இந்த அறிவிப்பை அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். நீங்கள் ஆவலுடன் காத்திருந்த வேதாளம் படத்தின் டீசர் இன்று நள்ளிரவில் வெளியாகும் என்று அவர் கூறியிருக்கிறார்.

சிலிர்ப்பாக இருக்கிறது

இன்றிரவு வேதாளம் டீசர் வெளியாகிறது. உங்கள் அனைவரின் முன்னிலையிலும் எனது இசையை முன்வைக்கப் போகிறேன் நினைக்கவே சிலிர்ப்பாக இருக்கிறது என்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்து இருக்கிறார்.

வேதாளம் புயலே

இந்த அறிவிப்பால் மிகுந்த உற்சாகம் அடைந்த அஜீத் ரசிகர்கள் #vedalamteaserstormontheway என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி அதனை இந்தியளவில் ட்ரெண்டடிக்க வைத்திருக்கின்றனர்.மேலும் சில கோரிக்கைகளையும் அஜீத் ரசிகர்கள் மற்றவர்களுக்கு விடுத்திருக்கின்றனர். அதாவது யூடியூபில் மட்டும் பாருங்கள் யூடியூப் லிங்கை மட்டும் லைக் செய்யுங்கள் என்று கூறியிருக்கின்றனர்.

சந்தோஷத்தில் ரசிகர்கள்

படக்குழுவினரின் அறிவிப்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களின் ட்வீட்டுகளால் ட்விட்டர் தற்போது திணறி வருகிறது. டீசர் வெளியாகும் போது ட்விட்டர் என்ன ஆகப் போகிறதோ?

  English summary
  Ajith's latest film Vedhalam Teaser will finally be released tonight. Ajith's Manager Suresh Chandra Posted "It is official.The much awaited teaser will release sharp by 12.00 a.m".
  Please Wait while comments are loading...

  Tamil Photos

  Go to : More Photos

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil