»   »  அஜீத்துக்கு வில்லன் ஐஸ்வர்யா ராயின் கணவர் அல்ல மாஜி காதலர்

அஜீத்துக்கு வில்லன் ஐஸ்வர்யா ராயின் கணவர் அல்ல மாஜி காதலர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல 57 படத்தில் அஜீத்துடன் மோதப் போவது பாலிவுட் ஹீரோ விவேக் ஓபராயாம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தல 57. இந்த படத்தில் அஜீத்துக்கு யாரை வில்லனாக போடுவது என்று சிவா குழம்பி வந்தார்.

வில்லன் கதாபாத்திரம் மிகவும் ஸ்டைலானதாம். அதனால் தான் சிவாவுக்கு குழப்பம்.

அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன்

அஜீத்துக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை போட உள்ளனர் என்று முதலில் கூறப்பட்டது. ஐஸ்வர்யா ராயின் கணவர் என்பதால் அபிஷேக் பற்றி தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் தேவையில்லை.

விவேக் ஓபராய்

விவேக் ஓபராய்

அஜீத்துடன் மோதப் போவது அபிஷேக் இல்லையாம் மாறாக விவேக் ஓபராயாம். அவர் மணிரத்னத்தின் அலைபாயுதே இந்தி ரீமேக் மற்றும் யுவா படங்களில் நடித்துள்ளார். 30க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார்.

வில்லன்

வில்லன்

விவேக் ஓபராய் ராம் கோபால் வர்மாவின் ரத்த சரித்திரா மற்றும் க்ரிஷ் 3 ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார். விவேக் ஓபராய் ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதல் ஆவார்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

தல 57 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. சென்னையில் நடப்பதாக இருந்த படப்பிடிப்பு ரஜினியின் படப்பிடிப்பு வசதியாக நடைபெற ஏதுவதாக ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டது.

  English summary
  Stylish actor Vivek Oberoi is set to clash with Ajith in his upcoming movie Thala 57 being directed by Siva.
  Please Wait while comments are loading...

  Tamil Photos

  Go to : More Photos

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil