அஜித்தின் துணிவு ரிலீஸ் அப்டேட் கொடுத்த பிரபலம்… பொங்கலுக்கு முன்னரே காத்திருக்கும் AK திருவிழா...
சென்னை: அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் அவரது 61வது படத்தில் நடித்து வருகிறார்.
ஏகே 61 என்ற டைட்டிலோடு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் தலைப்பு துணிவு என படக்குழு அறிவித்துவிட்டது.
மேலும், துணிவு படத்தில் இருந்து அஜித்தின் மாஸான போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை பரவசப்படுத்தின.

இறுதிக்கட்டத்தில் துணிவு
அஜித், ஹெச் வினோத், போனி கபூர் கூட்டணி நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்துள்ளது. 'ஏகே 61' என்ற டைட்டிலில் ஷூட்டிங் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் டைட்டிலும் போஸ்டர்களும் கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது. இதனிடையே பைக் டிரிப்பில் பிசியாக இருந்த அஜித், இப்போது துணிவு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றுள்ளார். இன்னும் சில தினங்களில் துணிவு படத்தின் சூட்டிங் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

பொங்கல் ரிலீஸில் துணிவு?
அஜித்தின் துணிவு பட டைட்டில் வெளியானதில் இருந்தே ரிலீஸ் தேதி குறித்தும் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்தனர். அதேநேரம் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகலாம் என்றும் செய்திகள் வெளியாகின. விஜய்யின் 'வாரிசு' திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாவதால், அஜித்தின் துணிவும் அப்போது வெளியாகுமா என சந்தேகம் எழுந்தது. அதேநேரம் பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு என இருதரப்பு ரசிகர்களும் சோஷியல் மீடியாஸில் குடுமிபிடி சண்டை போட்டு வந்தனர்.

புதிய ரிலீஸ் தேதி இதுதானா?
இந்நிலையில், துணிவு படத்தின் ரிலீஸ் குறித்து திரையுலகைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, துணிவு திரைப்படம் டிசம்பர் 2வது வாரம் அல்லது 3வது வாரத்தில் வெளியாகலாம் என, பிரபல திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்த விளக்கங்களும் தெரிவிக்கவில்லை. தனுஷின் வாத்தி, சிம்புவின் பத்து தல படங்கள் ஏற்கனவே டிசம்பரில் வெளியாக வெயிட்டிங்கில் உள்ளன.

துணிவு கதை தான் என்ன?
துணிவு படத்தின் அஜித்தின் கேரக்டர் குறித்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆனால், போஸ்டர்களில் துப்பாக்கியுடனும், ரூபாய் நோட்டுகளின் டிசைனும் இருப்பதை பார்க்கும் போது, இது வங்கி கொள்ளை சார்ந்த படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. துணிவு படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்ட போதே, இந்த தகவல்கள் வெளியாகி இருந்தன. பிரபல மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸின் தாக்கத்தோடு துணிவு படத்தின் திரைக்கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்போது துணிவு டிசம்பரில் வெளியாகலாம் என்ற தகவல், அஜித் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











