»   »  "தல" வரலை.. விஜய்யும் கண்டுக்கலை.. சிம்புவும் "மிஸ்".. கலகலத்த சினிமா கிரிக்கெட்!

"தல" வரலை.. விஜய்யும் கண்டுக்கலை.. சிம்புவும் "மிஸ்".. கலகலத்த சினிமா கிரிக்கெட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நடைபெறும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் ரஜினி, கமல் கலந்து கொண்டாலும் கூட அஜீத், விஜய் போன்ற நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இதன் மூலம் அவர்கள் இந்தப் போட்டியை ஆதரிக்கவில்லை என்பது வெளிச்சமாகியுள்ளது.

தங்களது நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை கட்டுவதற்காக மக்களிடம் பணம் வசூலிக்க நடிகர்கள் ஒன்றிணைந்து கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகின்றனர்.

நாகார்ஜுனா, நிவின் பாலி உள்ளிட்ட பக்கத்து மாநில நடிகர்கள் இப்போட்டியைக் காண நேரில் வந்துள்ள நிலையில், தமிழ் முன்னணி நடிகர்கள் பலரும் இதில் கலந்து கொள்ளவில்லை. புறக்கணித்து விட்டனர்.

அஜீத்

அஜீத்

இப்போட்டியை நடத்தப் போகிறார்கள் என்ற செய்திகள் வெளியான பின் அனைவர் மனதிலும் எழுந்த கேள்வி அஜீத் இதில் கலந்து கொள்ளுவாரா? என்பதுதான். கிரிக்கெட் போட்டியில் அஜீத் கலந்து கொள்வாரா? என்று இணையம் தொடங்கி முன்னணி ஊடகங்களில் பல அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்றன.

மக்களின் பணத்தைப் பறிப்பதை விரும்பாத அஜீத்

மக்களின் பணத்தைப் பறிப்பதை விரும்பாத அஜீத்

விஜயகாந்த் தலைவராக இருந்தபோதே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அஜீத் கலந்து கொள்வதில்லை. அதை ஆதரிப்பதும் இல்லை. மக்களின் பணத்தைப் பறிப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்று கூறி விட்டவர் அவர். எனவே இந்த நிகழ்ச்சியையும் அவர் ஆதரிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல அவர் இன்று வரவில்லை.

விஜய்

விஜய்

அஜீத் போலவே நடிகர் விஜய்யும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. இதேபோல இளம் நடிகர்கள் சிம்பு, தனுஷ் ஆகியோரும் இதில் கலந்து கொள்ளவில்லை.

சிம்பு

சிம்பு

ஒரு அணியை கொடுப்பதாகக் கூறியும் சிம்பு இந்த நட்சத்திரப் போட்டியில் கலந்து கொள்ள மறுத்து விட்டதாக கூறுகின்றனர். தல ரசிகன் என்று எப்போதும் கூறிக் கொள்ளும் சிம்பு, அஜீத் பாணியில் இதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரத்குமார்

சரத்குமார்

தேர்தல் பணிகளில் சரத்குமார் பிஸியாகி விட, நடிகர் சங்க விவகாரத்தால் அவரது மனைவி ராதிகாவும் இப்போட்டியில் கலந்து கொள்ளவில்லை. சங்கத் தேர்தலின் போது நடந்த விவகாரங்கள் ராதிகா மனதைப் புண்படுத்தி விட்டதால், அவர் இதில் கலந்து கொள்ள விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

நயன்தாரா, சமந்தா

நயன்தாரா, சமந்தா

முன்னணி நடிகைகளான நயன்தாரா, சமந்தா ஆகியோரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரம் கவுண்டமணி போன்ற மூத்த நடிகர்கள் இப்போட்டியை நேரில் காண வந்திருந்தனர்.

நடிகர் சங்கம் பெரும் ஏமாற்றம்

நடிகர் சங்கம் பெரும் ஏமாற்றம்

மொத்தத்தில் மக்கள் கூட்டமும் இல்லை, பல முன்னணி நடிகர்களும் வரவில்லை என்பதால் நடிகர் சங்க நிர்வாகிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Star Cricket: Ajith, Vijay, Simbu, Dhanush Abstained in this Event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil