ஏகே 62 அப்டேட்: விஸ்வாசம் கெட்டப்பில் அஜித்... ஃபேமிலி ஆடியன்ஸை குறிவைக்கும் விக்கி

சென்னை: அஜித்தின் துணிவு பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 150 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணிவை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் கமிட் ஆகியுள்ளார் அஜித்.
லைகா தயாரிக்கும் இந்தப் படம் குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 அதகளம் செய்த துணிவு

அதகளம் செய்த துணிவு

அஜித் - ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள துணிவு, பொங்கலை முன்னிட்டு 11ம் தேதி வெளியானது. அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஜய்யின் வாரிசும் 11ம் தேதி வெளியான நிலையில், இரண்டு படங்களுக்கும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. துணிவு படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்த அஜித், ஆக்‌ஷனில் அதகளம் செய்திருந்தார். துணிவு வெற்றியால் அவரது ஏகே 62 படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 விரைவில் ஏகே 62 ஷூட்டிங்

விரைவில் ஏகே 62 ஷூட்டிங்

அஜித்தின் 62வது படத்தை லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். தற்காலிகமாக 'ஏகே 62' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங், இந்த மாதம் இறுதியில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. துணிவில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தாடி, மீசையுடன் மாஸ்ஸாக நடித்த அஜித், ஏகே 62 படத்துக்காக கிளின் ஷேவ் செய்து செம்ம ஸ்மார்ட்டாக ரெடியாகிவிட்டார். மேலும் இந்தப் படத்தின் கதைகளம் எப்படி இருக்கும் என அப்டேட் கிடைத்துள்ளது.

 ஃபேமிலி என்டர்டெயின்மெண்ட்

ஃபேமிலி என்டர்டெயின்மெண்ட்

தொடர்ந்து ஆக்சன் ஜானர் படங்களில் நடித்து வரும் அஜித், ஏகே 62வில் கொஞ்சம் வித்தியாசமாக நடிக்கவுள்ளாராம். அதன்படி இந்தப் படம் முழுக்க முழுக்க ஃபேமிலி செண்டிமெண்ட் ஜானரில் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும், அஜித் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் தெறி ஆக்‌ஷன் ஜானரில் இருந்தாலும், அதில் அவர் பெண் குழந்தைக்கு அப்பாவாக நடித்திருப்பார். விவேகம் படத்திலும் அஜித்துக்கு அப்படியொரு கேரக்டர் தான் என்றாலும், இது வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இரண்டு நாயகிகள்

இரண்டு நாயகிகள்

அதேநேரம், ஏகே 62 க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏகே 62 படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய அப்டேட் இன்னும் அபிஸியலாக வெளியாகவில்லை. ஆனால் அஜித் ஜோடியாக திரிஷா நடிப்பதாக சொல்லப்பட்டது. இப்போது அவருடன் மேலும் ஒருவராக ஐஸ்வர்யா ராயும் நடிக்கவிருக்கிறாராம். விக்கி சொன்ன கதையைக் கேட்டு ரொம்பவே இம்ப்ரஸ் ஆன ஐஸ்வர்யா ராய், உடனே ஓக்கே சொல்ல்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்தும் ஐஸ்வர்யா ராயும் இணைந்து நடித்திருந்தனர். ஆனால், இருவரும் ஜோடியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 மெகா கூட்டணி

மெகா கூட்டணி

மேலும் காமெடி கேரக்டரில் சந்தானத்தை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். அஜித்தும் சந்தானம் நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்ல அவரும் ஓக்கே சொல்லிவிட்டாராம். அதேபோல், வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கவுள்ளாராம். அஜித் - அரவிந்த் சாமி இருவருமே ஸ்மார்ட்டான நடிகர்கள் என்பதால் ஹீரோயோயிசமும் வில்லத்தனமும் செம்ம வெரைட்டியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் ஏகே 62 படம் பற்றிய அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X