twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இங்கிலாந்து கார்ப் பந்தயத்தில் அஜீத்

    By Staff
    |

    இங்கிலாந்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பார்முலா-3 கார்ப் பந்தயத்தில் கலந்து கொள்ளவிருப்பதாக நடிகர் அஜீத்தெரிவித்துள்ளார்.

    நடிகராக வருவதற்கு முன் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக இருந்த அஜீத், கடந்த சில ஆண்டுகளாக கார்ப் பந்தயங்களில்கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.

    திரையுலகில் அவரது மார்க்கெட் தள்ளாட்டத்தில் இருக்கும் நிலையிலும் தொடர்ந்து ரேசில் கவனம் செலுத்தவே அஜீத்முடிவெடுத்துள்ளார்.

    இந் நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜீத், ஏப்ரல் மாதம் 14ம் தேதி இங்கிலாந்தில் உள்ள டானிங்டன் பார்க்கில்பார்முலா-3 கார்ப் பந்தயம் நடைபெறவுள்ளது. இதில் நானும் கலந்து கொள்கிறேன். மொத்தம் 12 போட்டிகள் கொண்டது இந்தபந்தயம்.

    இந்தியாவைச் சேர்ந்த அக்பர் இப்ராகிம், கருண் சந்தக், நரேன் கார்த்திகேயன் ஆகியோர் மட்டுமே இதுவரை பார்லா-3 ரகபோட்டிகளில் பங்கேற்றுள்ளனர். தற்போது நானும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சி தருகிறது.

    இந்தியாவில் கார்ப் பந்தயங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதை வெறும் விளையாட்டாக மட்டும்பார்க்காமல், வியாபாரமாகவும் கருத வேண்டும். பெரிய நிறுவனங்கள் கிரிக்கெட்டுக்கு மட்டுமே அதிக ஊக்கம் தருவதைவிட்டுவிட்டு, கார்ப் பந்தயங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.

    கார் பந்தயம் என்னவோ பெரும் பணக்காரர்களின் விளையாட்டு என்று கருதப்படுகிறது. அது உண்மையல்ல என்பதைநிரூபிக்கவே நானும் கூட இதில் ஈடுபடுகிறேன். இந்த விளையாட்டை நம் நாட்டில் அதிக பிரபலப்படுத்த வேண்டும் என்பது தான்என் குறிக்கோள்.

    கிரிக்கெட் வீரர்களைப் போல இந்த விளையாட்டுக்கும் ஊக்கம் தர வேண்டும். இப்போது கார்ப் பந்தயங்களில் தீவிர கவனம்செலுத்தப் போவதால், இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் மட்டுமே சினிமாபடப்பிடிப்புகளில் கலந்து கொள்ளப் போகிறேன்.

    அதே நேரத்தில் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஜனா, ஜி, அட்டகாசம் ஆகிய படங்களை முடித்துத் தந்துவிட்டுத் தான் கார்ரேசில் தீவிரமாக இறங்குவேன். கடந்த இரு ஆண்டுகளாக எந்தத் தயாரிப்பாளரிடமும் காசு வாங்கவில்லை, புதுப்படஒப்பந்தமும் போடவில்லை. இதனால் சிலர் வருத்தப்படுகிறார்கள். எக் காரணம் கொண்டும் சினிமாவை விட்டுவிடவேமாட்டேன்.

    கார் ரேசில் நான் ஜெயிக்கலாம், தோற்கலாம். ஆனால், என் முயற்சி தோற்காது. எனக்கு எந்த நிறுவனம் ஸ்பான்சர் செய்யவந்தாலும் ஏற்பேன்.

    சினிமாவில் இப்போது எந்த பொசிசனில் இருக்கிறேன் என்று யாரும் கவலைப்படத் தேவையில்லை. நான் கடிவாளம் போட்டகுதிரை மாதிரி நேர் கோட்டில் போகிறேன். என் பக்கவாட்டில் யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். ஆனால், குறுக்கேவந்தால் மிதித்துவிடுவேன் என்றார்.

    கடந்த ஆண்டு நடந்த பி.எம்.டபிள்யூ ஏசியா கார்ப் பந்தயத்தில் அஜீத் 12வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    இப்போது அவர் உபயோகித்து வரும் ரேஸ் காரில், தான் நடித்து வரும் மகா படத்திற்கு விளம்பரம் செய்யும் வகையில் மகாஎன்ற பெயரை பெரிதாக எழுதி வைத்துள்ளார்.

    பேட்டியின்போது அவரது மனைவி ஷாலினியும் உடனிருந்தார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X