twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முழுக்க முழுக்க மொபைலில் படமாக்கப்பட்ட ‘அகண்டன்‘.. டீசர் ரிலீஸ் !

    |

    சென்னை : நம்பிராஜன் ஃபிலிம் இண்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பில் நடிகர் சந்தோஷ் நம்பிராஜன் தயாரித்து, இயக்கியிருக்கும் முதல் திரைப்படம் 'அகண்டன்'. இந்த படத்தில் சந்தோஷ் நம்பிராஜன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஹரீணி நடித்திருக்கிறார்.

    இவருடன் முப்பதிற்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். கோலி சோடா, சண்டி வீரன் படப்புகழ் எஸ் என் அருணகிரி இசையமைக்க, கோட்டீஸ்வரன் எம் சுரேஷ் படத்தை தொகுத்திருக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த கதாநாயகனுக்கான போட்டி பிரிவில் கலந்து கொண்டவர் நடிகர் 'டூலெட்' சந்தோஷ் நம்பி ராஜன். 'டூலெட் 'என்ற முதல் படத்திலேயே சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த நடிகரான இவர், கதை எழுதி, கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் 'அகண்டன்'. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது.

    ரசிகர்களை திக்குமுக்காட வைத்த..இலியானாவின் பிகினி பிக்ஸ் !ரசிகர்களை திக்குமுக்காட வைத்த..இலியானாவின் பிகினி பிக்ஸ் !

    ஐபோன் 11 ப்ரோ

    ஐபோன் 11 ப்ரோ

    நடிகரும் இயக்குனருமான சந்தோஷ் நம்பிராஜன் பெருமையுடன் பல விஷயங்கள் பகிர்ந்து உள்ளார் . ,'அகண்டன் திரைப்படம் ஐபோன் 11 ப்ரோ என்ற செல்போன் மூலம் படமாக்கப்பட்டது. செல்போனில் படமாக்கப்பட்டாலும், ஒரே அறையில் நடப்பது போல் கதை அமைக்காமல், பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. கதைக்கு தேவை என்பதால் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. கமர்சியல் குடும்ப சித்திரமாக ‘அகண்டன்' தயாராகி இருக்கிறது.

    பிரத்தியேக தொழில்நுட்பம்

    பிரத்தியேக தொழில்நுட்பம்

    இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் இது என்னுடைய முதல் படைப்பு. மொபைலில் படமாக்கப்பட்டிருந்தாலும், பெரிய திரையில் வெளியாகும் வகையில் அதற்குரிய தொழில்நுட்பங்களுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக பிரத்தியேக தொழில்நுட்ப குழுவினர் பணியாற்றியிருக்கிறார்கள். திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் இப்படத்தின் வெளியீட்டை திட்டமிட்டிருக்கிறோம்.

    போஸ்ட் புரொடக்சன்

    போஸ்ட் புரொடக்சன்

    செல்போன் மூலம் திரைப்படத்தை உருவாக்கலாம் என்பதால், இனி யார் வேண்டுமானாலும் திரைப்படத்தை தயாரிக்க முடியும். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கதை உள்ளது. அந்தக் கதையை பெரிய திரையில் காணவேண்டும் என்றால், அது மொபைல் மூலம் சாத்தியப்படும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. ஓ டி டி எப்படி ஒவ்வொருவரின் கையில் இருக்கும் திரையரங்கமாக மாறி இருக்கிறதோ... அதேபோல் எதிர்காலத்தில் ஒவ்வொருவரின் கையிலிருக்கும் மொபைலும் கேமராவாக மாறிவிடும். எதிர்காலத்தில் செல்போன் மூலம் காட்சிகள் படமாக்கப்பட்டு, மொபைல் மூலமாகவே எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, ஓ டி டி என்ற தளம் டிஜிட்டல் தளங்கள் மூலம் படங்கள் வெளியாகக் கூடும். இதற்கு அகண்டன் முதல் விதையாக இருக்கும் என்று மனதில் பட்ட ஆழமான கருத்துக்களை சொல்லி உள்ளார் .

    சவால்கள்

    சவால்கள்

    மொபைலில் படமாக்குவதில் பல சவால்கள் இருந்தன. படத்தின் தரத்திற்காக Filmic Pro என்ற செயலியை பயன்படுத்தி இருக்கிறோம். தமிழில் இதற்கு முன்னர் மொபைல் மூலமாக படம் எடுக்கப்பட்டிருந்தாலும் ‘அகண்டன்'தான் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா என மூன்று நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் சர்வதேச தமிழ் திரைப்படம்.

    இரவு நேர நடமாடும்

    இரவு நேர நடமாடும்

    covid-19 என்ற தொற்றுக்கு முன்னரே நாங்கள் படப்பிடிப்பை நிறைவு செய்தோம். இந்த கொரோனா காலகட்டத்தில் படத்தின் இறுதிகட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தீபாவளி திருநாள் பரிசாக இப்படத்தை வெளியிடுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்தப் படத்தில் ரோட்டோரத்தில் கையேந்தி பவன் என்ற இரவு நேர நடமாடும் உணவகத்தை நடத்திவரும் வீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஹீரோ .

    கனவுக்கு இடையூறாக

    கனவுக்கு இடையூறாக

    எல்லோருக்கும் இருப்பது போல் அவனுக்கும் ஒரு கனவு இருக்கிறது. இரவு நேர நடமாடும் உணவகம் என்பதாலும், திறந்த வெளியில் மக்களுக்கான சேவையை செய்வதாலும், மழை மற்றும் காவல் துறையின் குறுக்கீடு மற்றும் அத்துமீறல்கள் தொடரும் போது அவனது கனவு சிதைகிறது. அதனால் ஒரு கட்டிடத்தில் வாடகைக்கு இடம் பிடித்து, அதில் ஒரு உணவகத்தைத் தொடங்கி, அதில் தன் ஆசை மனைவியை கல்லாவில் உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று வீரா ஆசைபடுகிறான். வீராவின் இந்த கனவுக்கு இடையூறாக இடியாக கொலை வழக்கு ஒன்றில் அவர் சிக்கிக் கொள்கிறார். இதிலிருந்து மீள்வதற்காக சிங்கப்பூர் செல்கிறார்.

    மலேசியாவில்

    மலேசியாவில்

    சிங்கப்பூரிலிருந்து எப்படி மலேசியாவுக்கு சென்று. தன்னுடைய அழகான குடும்பத்தை எப்படி காப்பாற்றினான்? எப்படி தன் இலட்சியத்தை அடைந்தான்? என்பது தான் படத்தின் மீதி கதை. இதில் நான்கு சண்டைக்காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இந்த படத்தில் ஆக்க்ஷன் காட்சிகளில் முதன்முறையாக நடித்திருக்கும் ஹீரோ பல யுக்திகளை கையாண்டு நடித்து உள்ளார் , இதில் சீன நடிகர் யாமீன் இடையேயான சண்டை ரசிகர்களால் பாராட்டப்படும். கிளைமாக்சில் இடம்பெறும் இந்த சண்டைக்காட்சி மலேசியாவில் படமாக்கப்பட்டது.

    மொபைலில் வெளியிடும் போக்கு

    மொபைலில் வெளியிடும் போக்கு

    அகண்டன் படத்திற்கு சிங்கப்பூரில் உள்ள சிங்காவுட் நிறுவனத்தை சேர்ந்த லோகன், சரஸ், கிருஷ்ணா ஆகிய மூவரும் இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களுடன் சந்தோஷ் நம்பிராஜின் சகோதரர் பிரேம்சந்த் இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.மொபைலில் படமெடுத்து, மொபைலில் வெளியிடும் போக்கு வெளிநாடுகளில் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.

    அகலமான நம்பிக்கை

    அகலமான நம்பிக்கை

    இத்தகைய படைப்பு புரட்சி, விரைவில் தமிழ் திரையுலகிலும் நிகழலாம், கதையும் திரைக்கதையும் தான் இனி கதாநாயகர்கள். நல்ல கதை இருந்தால் யார் வேண்டுமானாலும் திரைப்படத்தை உருவாக்க முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது. இவர்களுக்கு ‘அகண்டன்' அகலமான நம்பிக்கையை தரும். அகண்டன் படத்தின் டீஸர் வெளியாகியிருக்கிறது. இதற்கு இணையத்தில் அதிகளவில் வரவேற்பு கிடைத்து வருவதால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இனி வரும் காலங்களில் பல புதிய டிஜிட்டல் சாதனைகள் நடுக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை . அகண்டன் பல இணை துணை இயனர்களின் கனவுகளை அகல படுத்தி இருக்கிறது.

    English summary
    Akandan teaser release
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X