»   »  அறிமுக நடிகரின் படத்தை வாழ்த்தி.. தங்களது படங்களை தள்ளி வைத்த தாராள நடிகர்கள்

அறிமுக நடிகரின் படத்தை வாழ்த்தி.. தங்களது படங்களை தள்ளி வைத்த தாராள நடிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் அகில் அக்கினியின் அறிமுகப் படத்திற்காக தங்களது படங்களின் வெளியீட்டுத் தேதியை தள்ளிவைத்து, அவரது படத்திற்கு மற்ற பெரிய நடிகர்கள் வழி விட்டிருக்கின்றனர்.

தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகனான அகில் அக்கினி ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'அகில் தி பவர் ஆப் ஜா'. இப்படம் கடந்த 22ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

Akhil Akkineni's Debut film Akhil The Power Of Jua

ஆனால் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முடிவடையாமல் போனதில் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போனது. தற்போதைய நிலவரத்தின் படி நவம்பர் 11ம் தேதி அகில் தி பவர் ஆப் ஜா வெளியாகிறது.

நவம்பர் 5 மற்றும் 11 ம் தேதிகளில் ரவி தேஜாவின் பெங்கால் டைகர் மற்றும் நிகில் சித்தார்த்தாவின் சங்கராபரணம் ஆகிய படங்கள் வெளியாகவிருந்தன.

அகில் அறிமுகமாகும் இந்தப் படத்தின் வசூல் தங்களது படங்களினால் பாதிக்கக் கூடாது என்று எண்ணிய 2 படக்குழுவினரும், தங்களது படங்களின் வெளியீட்டுத் தேதியை உடனடியாக தள்ளி வைத்து விட்டனர்.

ரவிதேஜாவின் படத்தை 2 வாரங்கள் தள்ளி நவம்பர் 27 ம் தேதியும், சங்கராபரணம் படத்தை தேதி எதுவும் குறிப்பிடாமலும் தள்ளி வைத்திருக்கின்றனர்.

சங்கராபரணம் நாயகன் நிகில் சித்தார்த்தா படத்தின் ஹீரோ அகில் மற்றும் தயாரிப்பாளர் நிதின் ஆகிய இருவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

அகில் நாயகனாக அறிமுகமாகும் அகில் தி பவர் ஆப் ஜா படத்தின் பட்ஜெட், சுமார் 45 கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nagarjuna's younger son Akhil Akkineni's Debut film 'Akhil The Power Of Jua' will be releasing on November 11th. Now Ravi Teja's Bengal Tiger and Nikhil Siddhartha's Shankarabharanam Release Dates Postponed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil