இதெல்லாம் உங்களுக்கு தேவையா அண்ணாச்சி...கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றிகரமாக நான்கு வாரங்களை கடந்து, தற்போது ஐந்தாவது வாரத்தின் இறுதி பகுதியை நெருங்கி வருகிறது. இதுவரை பல கருத்து மோதல்கள், பிரச்சனைகள், சண்டைகள் என போய் கொண்டிருக்கிறது.
நமீதா மாரிமுத்து மருத்துவ காரணங்களால் வெளியேறிய நிலையில் நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு ஆகியோர் எலிமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் வெளியேற போகிறவர் யார் என்பதற்கான நாமினேஷன் ப்ராசசும் திங்கட்கிழமை நடத்தப்பட்டது.

எவிக்ஷன் இல்லையா
வழக்கமாக எந்த இரண்டு பேர் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என நினைக்கிறீர்கள் என காரணம் கேட்டு நாமினேஷன் ப்ராசசை நடத்தும் பிக்பாஸ், இந்த வாரம் எந்த இரண்டு பேரை காப்பாற்ற நினைக்கிறீர்கள். அதற்கான காரணத்துடன் சொல்லுங்கள் என கேட்கிறார். இதனால் தீபாவளி என்பதால் இந்த வாரம் எவிக்ஷன் கிடையாது என நெட்டிசன்கள் பலர் கருத்து கூறி வருகின்றனர்.

நாமினேட் ஆன 9 பேர்
இருந்தாலும் இந்த வாரம் நிரூப், அக்ஷரா, பாவனி, இசைவாணி, சுருதி, மதுமிதா, ஐக்கி பெர்ரி, அபினய், சிபி ஆகிய 9 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அபினய் அல்லது சுருதி வெளியேறவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலானவர்கள் சுருதியை வெளியேற்றச் சொல்லி கேட்டு வருகிறார்கள்.

சினிமா சினிமா டாஸ்க்
இந்நிலையில் இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் சினிமா சினிமா தலைப்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு சினிமா கதாபாத்திரங்களின் கேரக்டர்கள் கொடுக்கப்பட்டு, அவர்கள் அந்த கேரக்டராகவே மாறி, அவர்களுக்கான பாடல் ப்ளே செய்யப்படும் போது பிளாஸ்மா டிவி முன் அமைக்கப்பட்டுள்ள மேடையில் ஏறி நடனமாட வேண்டும்.

வச்சு செய்யும் நிரூப்
இந்த வாரம் நிலத்திற்கான ஆற்றல் வழங்கப்பட்டுள்ளதால் நிலத்திற்கான காயினை வைத்துள்ள நிரூப், ஹவுஸ்மேட்களை வச்சு செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து நெட்டிசன்கள் கடுப்பாகி கமெண்ட்களை அள்ளி தெளித்து வருகிறார்கள். இந்த வாரத்திற்கான கேப்டனாக சிபி தேர்வு செய்யப்பட்ட பிறகு, தன்னிடம் உள்ள காயினின் பவரை பயன்படுத்தி சிபிக்கு பதில் தான் கேப்டனாகி விட்டார் வருண்.

பாவனி - நிரூப் மோதல்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 31 ம் நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் ப்ரோமோவில், பாவனி சரியாக கேரக்டரில் ஒன்றி இருக்கவில்லை என நிரூப் சொல்கிறார். இதனால் நிரூப், பாவனி இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

அக்ஷரா - அண்ணாச்சி சண்டை
இந்த ப்ரோமோவில், நீலாம்பரி கேரக்டர் வழங்கப்பட்ட அக்ஷரா சரியாக பெர்ஃபார்ம் பண்ணவில்லை என்கிறார் இமான் அண்ணாச்சி. உங்களிடம் நீலாம்பரி போல் விரலை சொடுக்கி கூப்பிட்டால் உங்கள் வயதிற்கு நன்றாக இருக்காது என்று தான் கூப்பிடவில்லை என விளக்கமும் சொல்கிறார், கண்ணீர் விட்டு அழுகவும் செய்கிறார் அக்ஷரா. அக்ஷரா நன்றாக பண்ணியதாக சிபி அவருக்கு ஆதரவாக பேசுகிறார்.

இது தேவையா அண்ணாச்சி
இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு நெட்டிசன்கள் பலர், அண்ணாச்சிக்கு செம பல்ப். அண்ணாச்சி உங்களுக்கு இது தேவையா. அப்படியே பண்றதுக்கு அவங்க என்ன நீலாம்பரியா....அக்ஷரா. ஒரு நாளைக்கு ஒரு டைம் அழுகலாம். ஆனால் இந்த அக்ஷரா எப்போ பார்த்தாலும் அழுகிறார். சிம்பத்தி கிரியேட் பண்ண எப்ப பார்த்தாலும் அழுகிறார் என பல விதங்களில் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











