»   »  நாட்டுக்காக உயிர்விட்ட 12 ஜவான்களின் குடும்பத்திற்கு ரூ.1.08 கோடி அளித்த பிரபல நடிகர்

நாட்டுக்காக உயிர்விட்ட 12 ஜவான்களின் குடும்பத்திற்கு ரூ.1.08 கோடி அளித்த பிரபல நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளின் தாக்குதலில் பலியான 12 ஜவான்களின் குடும்பத்தாருக்கு ரூ. 1.08 கோடி அளித்துள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.

கடந்த சனிக்கிழமை சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள பேஜி கிராமத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 12 வீரர்கள் உயிர் இழந்தனர்.

இந்த தகவல் அறிந்து பலரும் வேதனை தெரிவித்தனர்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கும் சத்தீஸ்கரில் நடந்த நக்சலைட்டு தாக்குதல் குறித்து தெரிய வந்தது. உடனே அவர் ஜெய்சல்மர் டிஐஜி அமித் லோதாவுக்கு போன் போட்டு பேசினார்.

குடும்பத்தார்

குடும்பத்தார்

நக்சலைட்டு தாக்குதலில் பலியான ஜவான்களின் குடும்பத்தாரின் விபரங்களை சேகரித்து அளிக்குமாறு அக்ஷய் குமார் டிஐஜி லோதாவை கேட்டுக் கொண்டார்.

ரூ. 1 கோடி

ரூ. 1 கோடி

பலியான 12 ஜவான்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.9 லட்சம் தர விரும்புவதாக அக்கி டிஐஜி லோதாவிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு டிஐஜி மகிழ்ச்சி அடைந்தார்.

டிஐஜி

டிஐஜி

அக்ஷய் எப்பொழுதும் என்னுடன் டச்சில் இருப்பவர். சுக்மா சம்பவம் குறித்து அறிந்ததும் பலியான ஜவான்களின் குடும்பத்தாருக்கு தானாக முன்வந்து பணம் அளித்தார் என்று டிஐஜி லோதா தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actor Akshay Kumar has donated Rs. 1.08 crore to the families of twelve jawans who were killed in the naxal attack in Chhattisgarh's Sukma district.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil