twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அக்ஷய் குமாரின் சாம்ராட் ப்ருத்விராஜிற்கு குவைத், ஓமனில் தடை

    |

    மும்பை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்த சாம்ராட் ப்ருத்விராஜ் படத்திற்கு ஓமன் மற்றும் குவைத் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரிலீசான 5 நாட்களில் இப்படி தடை விதிக்கப்பட்டதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

    Akshay Kumars Samrat Prithviraj movie banned in Kuwait and Oman

    அக்ஷய் குமார், சஞ்சய் தத், சோனு சூட் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சாம்ராட் ப்ருத்விராஜ். 2017 ம் ஆண்டு மிஸ் வேர்ல்டு பட்டம் பெற்ற மனுஷி சில்லர் நடிகையாக அறிமுகமாகி உள்ள படம். டாக்டர் சந்திரபிரகாஷ் திரிவேதி இயக்கிய இந்த படம் ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் ரலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு வரிவிலக்கு அளிப்பதாக உத்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச அரசுகள் அறிவித்திருந்தன.

    கொரோனா, லாக்டவுன் காரணமாக கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதிக பொருட் செலவில் மிக பிரம்மாண்டமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

    என்கிட்ட இதை எல்லாம் எதிர்பார்க்காதீங்க...பிரேமம் டைரக்டர் சொன்ன பகீர் தகவல் என்கிட்ட இதை எல்லாம் எதிர்பார்க்காதீங்க...பிரேமம் டைரக்டர் சொன்ன பகீர் தகவல்

    பெரிய அளவில் வசூலை பெறாவிட்டாலும் ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும் பாசிடிவ் கமெண்ட்களை இந்த படம் பெற்றிருந்தது. சமீபத்தில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு இந்த படம் பிரத்யேகமாக போட்டு காண்பிக்கப்பட்டது. அவரும் படத்தை பார்த்து விட்டு, படக்குழுவிற்கு பாராட்டி தெரிவித்திருந்தார்.

    உலகின் பல நாடுகளிலும் சாம்ராட் ப்ரத்விராஜ் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், குவைத் மற்றும் ஓமன் நாடுகளில் மட்டும் இந்த படம் ரிலீஸ் செய்யப்படவில்லை. வாரியர் கிங் பற்றிய படம் என்பதால் இந்த படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது என அந்த நாட்டு அரசுகள் கூறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    IANS வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்து மன்னர் சாம்ராட் ப்ருத்விராஜ் பற்றி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு குவைத் மற்றும் ஓமன் போன்ற சர்வதேச நாடுகளில் தடை விதிக்கப்பட்டது துரதிஷ்டவசமானது என குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த படம் உற்சாகமாகவும், பெருமையாகவும் அக்ஷய் குமார் பதிவு வெளியிட்ட மறுநாளே இது போன்று தடை விதிக்கப்பட்டுள்ளது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

    அக்ஷய் குமார் தனது பதில், இந்தியாவின் பலமிகுந்த அரசர்களில் ஒருவரான சாம்ராஜ் ப்ருத்விராஜ் சவுகானின் வாழ்க்கையை கொண்டாடுவதில் ஒட்டுமொத்த சாம்ராட் ப்ருத்விராஜ் டீமும் மகிழ்ச்சி அடைகிறது. நான்கு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு, பல தடைகளை தாண்டி இந்த படம் ரிலீசாகி உள்ளது பெருமையாக உள்ளது. சாம்ராட்டின் வாழ்க்கை பற்றி நாட்டு மக்களுக்கு மிக குறைந்த அளவிலேயே தெரிந்த விஷயங்கள் இந்த படத்தில் பேசப்பட்டுள்ளன.

    குறிப்பாக இந்த கால இளைஞர்களுக்கு தெரியாத பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. தயவு செய்து அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என அக்ஷய் குமார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    English summary
    Akshay Kumar starrer Samrat Prithviraj which releases in India on June 3rd has reportedly been banned in Oman and Kuwait. Movie was not released in these countries.The givernments of the two countries have banned the film on the warrior king.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X