twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    3 மாநிலங்களில் வரிவிலக்கு பெற்ற அக்ஷயின் சாம்ராட் பிரித்விராஜ்.. சர்வதேச அளவில் பிரம்மாண்ட ரிலீஸ்!

    |

    மும்பை : நடிகர் அக்ஷய் குமார், மனுஷி சில்லர், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய தினம் வெளியாகியுள்ளது சாம்ராட் பிரித்விராஜ் படம்.

    தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் படம் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது.

    ராஜபுத்திர மன்னன் பிரித்விராஜ் சவுஹான் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

    கமலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்.. விக்ரம் படம் பற்றி இந்த நடிகர் என்ன சொல்லியிருக்காரு பாருங்க! கமலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்.. விக்ரம் படம் பற்றி இந்த நடிகர் என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

    வரலாற்றுப் படம்

    வரலாற்றுப் படம்

    ராஜபுத்திர மன்னன் பிரித்விராஜ் சவுஹான் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ளது சாம்ராட் பிரித்விராஜ் படம். இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார் மனுஷி சில்லர். மேலும் சஞ்சய் தத், சோனு சூட், மானவ் விஜ், அசுதோஷ் ராணா, சாக்ஷி தன்வார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    சாம்ராட் பிரித்விராஜ் படம்

    சாம்ராட் பிரித்விராஜ் படம்

    படத்தில் பிரித்விராஜ் சவுஹானாக அக்ஷய் குமார் நடித்துள்ள நிலையில், மனுஷி சில்லர் சன்யோகிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. வரலாற்று திரைப்படமான சாம்ராட் பிரித்விராஜ், தமிழ், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது.

    கமலுடன் மோதும் அக்ஷய்

    கமலுடன் மோதும் அக்ஷய்

    சந்திரபிரகாஷ் திவேதி இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இன்றைய தினம் சர்வதேச அளவில் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. தற்போது கமல்ஹாசனின் விக்ரம் படமும் திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீசாகியுள்ளன.

    உத்தரபிரதேசத்தில் வரிவிலக்கு

    உத்தரபிரதேசத்தில் வரிவிலக்கு

    இதனிடையே, சாம்ராட் பிரித்விராஜ் படத்தின் சிறப்பு காட்சி நேற்றைய தினம் லக்னோவில் திரையிடப்பட்டது. உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்தத் திரைப்படத்தை பார்த்தார். படம் பார்த்த பின்பு படக்குழுவினரை வெகுவாக பாராட்டிய அவர், இந்தத் திரைப்படத்திற்கு மாநிலத்தில் வரிவிலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

    உத்தரகாண்ட், மபியிலும் வரிவிலக்கு

    உத்தரகாண்ட், மபியிலும் வரிவிலக்கு

    உத்தரபிரதேசத்தில் மட்டுமின்றி பாஜக ஆளும் உத்தரகாண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு நாடு முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பிரம்மாண்ட தயாரிப்பு

    பிரம்மாண்ட தயாரிப்பு

    சிறிய பட்ஜெட் படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது அவசியமான ஒன்று. ஆனால் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள சாம்ராட் பிரித்விராஜ் படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தங்களது படங்களை வெளியிட சிரமப்படும் படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு இத்தகைய வரிவிலக்குகளை அறிவிக்க வேண்டும் என்பதே நீண்ட நாட்களாக ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

    English summary
    Akshay kumar's Samrat Prithviraj gets tax free in 3 states
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X