Don't Miss!
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- News
இந்தியா தனது பிரச்சினைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது! நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை
- Automobiles
இன்றைய 2023ஆம் காலக்கட்டத்தில் இந்த அம்சங்கள் இன்றி கார் வாங்குவதே வேஸ்ட்! உங்க கார்களில் என்னென்ன மிஸ் ஆகுது?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Finance
பட்ஜெட்டுக்கு முன்பு தங்கம் விலை சரிவு.. தொடர்ந்து குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
- Travel
இனி திருப்பதி தரிசனம், ரூம் புக்கிங் செய்வது ஈசி – TTD யின் புதிய மொபைல் செயலி!
- Sports
3வது டி20 போட்டியிலும் இப்படியா? அகமதாபாத் பிட்ச்-ல் உள்ள சஸ்பன்ஸ்.. என்ன செய்யப்போகிறார் பாண்ட்யா??
ஆஸ்கர் விழாவுக்கு புதிய உறுப்பினர்கள்.. பிரபல ஹீரோ ஹிர்த்திக் ரோஷன், நடிகை ஆலியாவுக்கு அழைப்பு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழா உறுப்பினர்களாக, பிரபல ஹீரோ ஹிர்த்திக் ரோஷன், நடிகை ஆலியா பட் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டின் உயரிய சினிமா விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, ஒவ்வொரு ஆண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம்.
உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் விருது விழா இது.
உலகம் ஒருகணம் நிறமிழந்துபோனதாய் நெஞ்சுடைகிறேன்.. ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவு.. வைரமுத்து உருக்கம்!

அடுத்த வருடம்
93 ஆவது ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சிகள் அடுத்த வருடம் பிப்ரவரி 28 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவி இருப்பதால், விருது விழா 2 மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது விருது நிகழ்ச்சிகள், அடுத்த வருடம் ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது

ஹிரித்திக் ரோஷன்
இந்நிலையில், இந்த விழாவுக்கு, ஒவ்வொரு வருடமும் கலைத்துறையில் சாதித்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். இந்த வருடம் 68 நாடுகளில் இருந்து 819 கலைஞர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில், இந்தியாவில் நடிகர் ஹிரித்திக் ரோஷன், ஆலியா பட் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ஜோதா அக்பர்
'கல்லி பாய்', 'ராஸி' உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக நடிகை ஆலியா பட்-டும் ஜோதா அக்பர், சூப்பர் 30 ஆகிய சிறந்த படங்களில் நடித்ததற்காக ஹிரித்திக் ரோஷனும் அழைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அழைப்பு அனுப்பப்பட்டவர்களில் 15 பேர் ஏற்கனவே ஆஸ்கர் விருது பெற்றவர்கள். சிலர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

விஷூவல் எபெக்ட்ஸ்
இவர்கள் தவிர, இந்தியாவில் இருந்து ஆவணப்பட இயக்குனர்கள் நிஷ்டா ஜெயின், அமித் மாதேஷியா, விஷூவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளர் விஷால் ஆனந்த் மற்றும் சந்தீப் கமல், வடிவமைப்பாளர் நீடா லுல்லா, காஸ்டிங் இயக்குனர் நந்தினி ஶ்ரீகென்ட் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வருடம் இயக்குனர் அனுராக் காஷ்யப், அனுபம் கெர் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.