»   »  நீ என்ன பெரிய அப்பாடக்கரா: காதலருடன் மோதிய சுந்தர் சி. பட ஹீரோயின்

நீ என்ன பெரிய அப்பாடக்கரா: காதலருடன் மோதிய சுந்தர் சி. பட ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil
காதலருடன் மோதிய சுந்தர் சி. பட ஹீரோயின்- வீடியோ

மும்பை: நடிகை திஷாவும், அவரது காதலர் டைகர் ஷ்ராபும் சண்டை போட்டுள்ளனர்.

டோணி படம் மூலம் பிரபலமானவர் திஷா பதானி. அவர் பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராபை காதலித்து வருகிறார். திஷா டைகரை அவர் வீட்டிற்கு அனுப்பாமல் தன் வீட்டிலேயே தங்க வைத்துள்ளாராம். இது டைகரின் அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

இந்நிலையில் காதல் ஜோடிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

 விளம்பரம்

விளம்பரம்

பாகி 2 இந்தி படத்தில் டைகர் ஷ்ராபும், திஷா பதானியும் சேர்ந்து நடித்துள்ளனர். இருவரும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

டைகர்

டைகர்

பாகி 2 விளம்பர நிகழ்ச்சியின்போது டைகர் மற்றும் திஷா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் டைகருக்கு முக்கியத்துவம் கொடுப்பது திஷாவுக்கு பிடிக்கவில்லையாம்.

 டான்ஸ்

டான்ஸ்

தான் முறையாக நடனம் கற்றிருந்தும் பாகி 2 படத்தில் தனக்கு சோலோ டான்ஸ் கொடுக்கப்படவில்லை என்று திஷா கோபத்தில் உள்ளாராம். காதலர் டைகரை அனைவரும் பாராட்டுவது திஷாவை எரிச்சல் அடைய வைத்துள்ளதாம்.

 கவனம்

கவனம்

விளம்பர நிகழ்ச்சிகளில் திஷாவும் டைகரும் சேர்ந்து டான்ஸ் ஆடினால் அனைவரும் டைகரை தான் பார்க்கிறார்களாம். டைகர் டான்ஸ் ஆடுவதில் வல்லவர். இதுவும் திஷாவை கடுப்படைய வைத்துள்ளதாம்.

ஸ்டண்ட்

ஸ்டண்ட்

பாகி 2 படத்திற்காக டைகர் ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். டூப் வேண்டாம் என்று அடம் பிடித்து சவாலான காட்சிகளில் நடித்துள்ளார். அப்படி இருக்க அனைவரும் அவரை தானே கவனிப்பார்கள். இந்த பொண்ணு இப்படி பொறாமை பிடித்ததா இருக்கே என்று ஏற்கனவே பாலிவுட்டில் பேச்சு கிளம்பிவிட்டது. திஷா சுந்தர் சி.யின் சங்கமித்ரா படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The alleged couple, Tiger Shroff & Disha Patani are on a movie promotion spree, we hear that things are not as smooth between them, as it looks from the outside. Wondering why? Apparently, Disha feels Tiger is stealing all the thunder from her!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X