Don't Miss!
- Sports
ஏன்யா இப்படி பண்ற??.. பேச்சை கேட்காமல் தவறு செய்த ஷர்துல் தாக்கூர்.. களத்திலேயே விளாசிய ரோகித்!
- Technology
Netflix இருக்கு, Hotstar இருக்கு, Amazon Prime இருக்கு!! எல்லாமே இலவசம்.. நின்னு அடிக்கும் Airtel
- News
"உலக அழிவின் கடிகாரம்".. நகர்த்தப்பட்ட முள்! நேரம் கம்மியாதான் இருக்காம்! ஆராய்ச்சியாளர்கள் வார்னிங்
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த 6 வகை பெண்களை திருமணம் செய்து கொள்வது மரணத்தை விட கொடியதாம்...!
- Automobiles
சட்டபடி இது தப்புங்க! ஆட்டோ எக்ஸ்போவில் தில்லாக காட்சியளித்த மாடிஃபைடு கார்கள்... எல்லாமே செம்ம அழகா இருக்கு!
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
ஆஸ்கர் ரேஸில் இந்தியாவுக்கு பெருமை... கவனம் ஈர்க்கும் ஆல் தட் ப்ரீத்ஸ், தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்
கலிபோர்னியா: 2023ம் ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதி நாமினேஷன் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் சிறந்த பாடல் பிரிவில் நாமினேசன் ஆகியுள்ளது.
ஆர்ஆர்ஆர் மட்டுமில்லாமல் இந்தியாவில் இருந்து மொத்தம் 3 படங்கள் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் போட்டியில் இடம் பிடித்துள்ளன.
ஆஸ்கர் விருதுகள் 2023 பரிந்துரைகளுக்கான இறுதி நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள 3 படங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
ப்பா..
பார்க்கவே
கலக்கலா
இருக்கே..
மேள
தாளத்துடன்
காரில்
ஊர்வலம்
வரும்
பிக்
பாஸ்
ஷிவின்!

ஆஸ்கர் இறுதிப் பட்டியலில் ஆர்ஆர்ஆர்
95வது ஆஸ்கார் விருதுக்கான அதிகாரப்பூர்வ இறுதிப் பட்டியல், அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் மூலம் அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ரிஸ் அகமது, அலிசன் வில்லியம்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில் ராஜமெளலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஒரு பிரிவிஸ்ல் தேர்வாகியுள்ளது. சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல பிரிவுகளில் போட்டியிட்ட நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் பிரிவில் தேர்வாகியுள்ளது. இதனால் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

சிறந்த ஆவணப்படம் ஆல் தட் ப்ரீத்ஸ்
சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் இறுதிப் போட்டியில் 'ஆல் தட் ப்ரீத்ஸ்' (All that Breathes) இடம்பெற்றுள்ளது. ஷௌனக் சென் இயக்கியுள்ள இந்த ஆவணப்படம் நதீம், சவுத் என்ற இரு சகோதரர்களின் வாழ்க்கையை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. அவர்கள் இருவரும் டெல்லியில் உள்ள ஒரு தற்காலிக மருத்துவமனையில் பறவைகளைப் பராமரிப்பதில் தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம் தற்போது ஆஸ்கர் போட்டியிலும் களமிறங்கியுள்ளது. ஹிடன் லெட்டர்ஸ், சில்ட்ரன் ஆஃப் தி மிஸ்ட், ஃபயர் ஆஃப் லவ் போன்ற ஆவணப்படங்களுடன் ஆல் தட் ப்ரீத்ஸ் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறந்த ஆவண குறும்படம்
அதேபோல் சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' (The Elephant Whisperers) என்ற படம் தேர்வாகியுள்ளது. கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய ஆவணப்படமான இதில், கைவிடப்பட்ட இரண்டு யானைகளும், அதனை பாதுகாக்கும் காவலர்களுக்கும் இடையே எவ்வாறு பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகிறது என்பதை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தயாரிப்பாளர் குனீத் மோங்கா, அனைவருக்கு நன்றி கூறியுள்ளார். இந்தப் படத்துக்கும் ஆஸ்கர் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியேறிய செல்லோ ஷோ
முக்கியமாக இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட செல்லோ ஷோ திரைப்படம் இறுதிப் பட்டியலில் இருந்து வெளியேறியது. குஜராத்தி மொழியில் எடுக்கப்பட்ட செல்லோ ஷோ நடிப்பு, ஒளிப்பதிவு இயக்கம் ஆகியவற்றிற்காக இறுதிப் பட்டியலில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. பான் நளின் இயக்கிய இந்தப் படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.