»   »  நடிகர் அல்லரி நரேஷ் திருமணத்திற்கு வந்து விருட்டென்று செல்லாமல் இருந்த சந்திரபாபு நாயுடு

நடிகர் அல்லரி நரேஷ் திருமணத்திற்கு வந்து விருட்டென்று செல்லாமல் இருந்த சந்திரபாபு நாயுடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷ், விருபா திருமணம் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

அல்லரி தெலுங்கு படம் மூலம் நடிகர் ஆனவர் நரேஷ். சூப்பர் ஹிட்டான அந்த படத்தில் இருந்து அல்லரி நரேஷ் என்று அழைக்கப்படும் அவர் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் குறும்பு, போராளி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பிரபல தெலுங்கு இயக்குனரும், தயாரிப்பாளருமான சத்யநாராயணாவின் மகன் அல்லரி நரேஷுக்கும், விருபா கண்டமனேனிக்கும் கடந்த 29ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.

மோகன் பாபு

மோகன் பாபு

இளம் நடிகரான நரேஷின் திருமண விழாவில் மூத்த நடிகரான மோகன் பாபு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருமண விழாவிற்கு வந்து தம்பதியை வாழ்த்தினார். திரை உலகினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் மாநில முதல்வர் கலந்து கொள்வது புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜமவுலி

ராஜமவுலி

பிரபல தெலுங்கு இயக்குனரான எஸ்.எஸ். ராஜமவுலி பாகுபலி வேலையில் பிசியாக இருந்தபோதிலும் நரேஷின் திருமண விழாவில் கலந்து கொண்டார்.

கோபிசந்த்

கோபிசந்த்

தெலுங்கு ஹீரோ கோபிசந்த் சக நடிகர் அல்லரி நரேஷின் திருமண நிகழ்ச்சிக்கு வந்து இளம் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அல்லு அரவிந்த்

அல்லு அரவிந்த்

பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும், நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் திருமண விழாவுக்கு வந்து மணமக்களை ஆசீர்வாதம் செய்தார்.

ரோஜா

ரோஜா

நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வுமான ரோஜா திருமண விழாவுக்கு வந்து மணமக்களை வாழ்த்தினார்.

நானி

நானி

பிரபல தெலுங்கு நடிகர் நானி அல்லரி நரேஷ் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு இளம் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மஞ்சு மனோஜ்

மஞ்சு மனோஜ்

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனும், நடிகருமான மஞ்சு மனோஜ் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவருக்கு கடந்த 20ம் தேதி தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Telugu actor Allari Naresh has tied the knot with Virupa on may 29th in Hyderabad. Andhra CM Chandrababu Naidu and Tollywood celebs attended the wedding.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil