நடிகை அல்போன்சா முன்ஜாமீன் கேட்டு மேல்முறையீட்டு மனு!

சென்னை விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரேயுள்ள சியாமளா கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை அல்போன்சா (வயது 32) வசிக்கிறார்.
இவரது நண்பர் நடிகர் வினோத்குமார். இவர் அல்போன்சா வீட்டில் தங்கி இருந்தார். சமீபத்தில் அல்போன்சா வீட்டில் வினோத்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வினோத்குமார் மர்மசாவு வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யக் கூடும் என்று சந்தேகிப்பதால், முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் அல்போன்சா மற்றும் அவரது சகோதரர் மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஆரம்பகட்ட நிலையில் இருப்பதால் முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி, 2 பேரின் மனுவையும் நீதிபதி பொன்.கலையரசன் தள்ளுபடி செய்தார். அதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அல்போன்சா மனு தாக்கல் செய்துள்ளார்.
தான் நடித்த சினிமா படம் சம்பந்தமாக மன உளைச்சலில் இருந்த வினோத்குமார் தற்கொலைதான் செய்துள்ளார், அவரது சாவுக்கு நான் எந்த வகையிலும் காரணமல்ல என்று அதில் அல்போன்சா தெரிவித்துள்ளார்.
எனவே குற்றமற்ற தனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று அதில் அல்போன்சா கோரியிருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











