For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிரேமம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோ பகத் பாசில் இல்லையாம் பிரித்விராஜாமே

  |

  சென்னை : பிரேமம் என்ற சென்சேஷனல் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.

  மிகக்குறைந்த பட்ஜெட்டில் படங்களை இயக்கி அதிக வசூலை ஈட்டி வரும் இவர் அடுத்ததாக பகத் பாசில் ஹீரோவாக, நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் பாட்டு என்ற படத்தை இயக்க இருந்தார்.

  இப்படி பண்ணலாமா தலைவி.. உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோ போட்ட கங்கனா.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்!இப்படி பண்ணலாமா தலைவி.. உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோ போட்ட கங்கனா.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்!

  இந்த நிலையில் பகத் பாசில் நடிக்க இருந்த திரைப்படம் தொடங்க தாமதமாகும் என்பதால் மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள பிரித்விராஜ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

  நேரம்

  நேரம்

  இரண்டே திரைப்படத்தில் மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனராக உள்ள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தமிழ் ரசிகர்களுக்கும் மிகப் பிடித்த இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் உடன் இணைந்து நாளைய இயக்குனர் நிகழ்சிகள் கார்த்திக் சுப்புராஜின் படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய அல்போன்ஸ் புத்திரன் நேரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நிவின் பாலி, நஸ்ரியா,பாபி சிம்ஹா, ராமேஷ் திலக் ஆகியோரின் நடிப்பில் வெளியான நேரம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதில் இடம்பெற்ற பிஸ்தா பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவி செம வைரலானது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நேரம் பல மடங்கு வசூலை வாரி குவித்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் அல்போன்ஸ் புத்திரன் நிவின் பாலி கூட்டணி பிரேமம் படத்திலும் தொடர்ந்தது.

  மூன்று ஹீரோயின்கள்

  மூன்று ஹீரோயின்கள்

  பிரேமம் மலையாள மொழியில் உருவாகி இருந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியது . இதற்கு இந்திய அளவில் பல விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரேமம் தெலுங்கிலும் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சாய்பல்லவி அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் என மூன்று கதாநாயகிகள் இதில் நடித்திருக்க அவருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மூவரும் இப்பொழுது பிஸியான ஹீரோயின்களாக உள்ளனர். மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் காதலை இயல்பாக கூறியிருந்த இந்த படம் எதிர்பார்த்ததை விடவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக தமிழ் ரசிகர்களிடையே இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த அனைவரும் நிவின்பாலி போலவே தாடி வைத்துக் கொண்டு வலம் வர ஆரம்பித்தனர். பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்து ஓவர் நைட்டில் மலையாள ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். இப்பொழுது தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாக டோலிவுட்டை ஆட்டிப் படைத்து வருகிறார்.

  பாட்டு

  பாட்டு

  2015 ஆம் ஆண்டு வெளியாகிய சென்சேஷனல் ஹிட் படமாக அமைந்த ப்ரேமம் படத்திற்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அடுத்த படம் குறித்த அட்டகாசமான அப்டேட் ஒன்றை வெளியிட்டிருந்தார். இசையை மையமாக வைத்து படம் ஒன்றை உள்ளதாக அதில் அறிவித்திருந்தார். அப்படத்திற்கு "பாட்டு " என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதில் ஹீரோவாக பகத் பாசில் நடிக்க இருப்பதாகவும் கதாநாயகியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. இவ்வாறு இயக்குனராகவும் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்த அல்போன்ஸ் புத்திரன் பாட்டு படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாக இருந்தார் . பாட்டு படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பார்த்து பார்த்து உருவாக்கி வந்த அல்போன்ஸ் புத்திரன் இதன் படப்பிடிப்புக்கு செல்ல இன்னும் கொஞ்சம் காலதாமதம் ஆகும் என்பதால் பகத் பாசிலை வெயிட்டிங்கில் வைத்துவிட்டு பிரித்விராஜ் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

  பிரித்விராஜ் உடன் கூட்டணி

  பிரித்விராஜ் உடன் கூட்டணி

  பிரித்விராஜ் இதுவரை ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்த நிலையில் மோகன்லாலின் லூசிஃபர் படத்தை இயக்கி இயக்குனராக மாறியுள்ளார். அதேசமயம் பல தரமான படங்களை தயாரித்தும் வருகிறார். இந்த நிலையில் அல்போன்ஸ் புத்திரன் உடன் இணைய உள்ள புதிய திரைப்படத்தை

  மேஜிக் ஃப்ரேம்ஸுடன் இணைந்து பிரித்விராஜ் தயாரிக்க உள்ளார். த்ரில்லர் கதை களத்தில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. தொடர்ந்து காதல் படங்களை இயக்கி வந்த அல்போன்ஸ் புத்திரன் இப்போது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் இயக்க உள்ளதால் மலையாள ரசிகர்களிடையே இந்த அறிவிப்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. மேலும் இந்த படத்தைத் தொடர்ந்து தமிழில் நேரடி படம் ஒன்றையும் அல்போன்ஸ் புத்திரன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

  வாழ்நாள் கனவு

  வாழ்நாள் கனவு

  தீவிர ரஜினி ரசிகரான அல்போன்ஸ் புத்திரன் அவரை இயக்குவதை மிகப் பெரிய கனவாக கொண்டிருக்க சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் ஓபனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குவது தன்னுடைய வாழ்நாள் கனவு என தெறிவித்திருந்தார். அது மிகப்பெரிய வைரல் ஆன நிலையில் தமிழில் நேரடியாக அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் படம் சூப்பர் ஸ்டார் உடைய படமாகவும் இருக்கலாம் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. எனவே மிக விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்க அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது.

  English summary
  Alphonse puthren to direct prithviraj instead of fahath fassil in his next project. this new movie to be co produced by prithviraj. this movied is full of thriller movie. alphonse puthren also had a plan to direct tamil film.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X