Just In
- 10 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 10 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 12 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 13 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
இறுதி வாக்காளர் பட்டியல் இன்று ரிலீஸ்.. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? எப்படி பார்க்கலாம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.01.2021: இன்று இந்த ராசிக்காரங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கப் போகுது…
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹனிமூன் கிளம்பிட்டாரோ.. புதுக் கணவருடன் பிளைட்டில் அமலா பால்.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: நடிகை அமலா பால் தனது கணவருடன் பிளைட்டில் செல்லும் போட்டோ வெளியாகியுள்ளது.
நடிகை அமலா பால் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டார்.
இதனை தொடர்ந்து இயக்குநர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே ஏஎல் விஜயை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார்.

ஓரங்கட்டப்பட்டார்
தொடர்ந்து முன்னணி நடிகையாக இருந்தார் அமலா பால். கடைசியாக ஆடை என்ற படத்தில் உடம்பில் ஒட்டுத் துணிக்கூட இல்லாமல் நிர்வாணமாக நடித்தார் அமலா பால். இதனால் பெரும் விமர்சனத்திற்கு ஆளானார் அமலா பால். கோலிவுட்டே அவரை ஒதுக்கியது போன்று ஓரங்கட்டப்பட்டார்.

வெப் சீரிஸ்
ஆடை படத்திற்கு பிறகு அமலா பாலுக்கு தமிழில் ஒரு படத்தில் கூட நடிக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்தும் தூக்கி எறியப்பட்டார். இதனை தொடர்ந்து தெலுங்கில் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமானார். பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனதால் அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டார்.

திடீர் திருமணம்
அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
அதன் பிறகு ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார் அமலா பால். இந்நிலையில் நடிகை அமலா பால் தனது காதலரான பாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

ரகசிய திருமணம்
இருவரின் திருமண போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவியது. இருவரும் லிப்லாக் கொடுத்துக்கொள்ளும் போட்டோக்களும் வைரலானது. என்ன இப்படி சொல்லாமல் கொள்ளாமல் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டார் என தகவல் பரவியது.

ஃபிளைட்டில்..
ஆனால் அவர்களுக்கு திருமணம் ஆகி பல மாதங்கள் ஆகிறது. இப்போதுதான் போட்டோக்கள் வெளியாகி வருகிறது என்றும் தகவல்கள் பரவின. இந்நிலையில் இருவரும் ஃபிளைட்டில் ஒன்றாக செல்லும் போட்டோ வெளியாகியுள்ளது. இருவரும் பிளைட்டில் அமர்ந்திருப்பது போன்ற போட்டோ வைரலாகி வருகிறது.

ஹனிமூன்?
இதனை பார்த்த நெட்டிசன்கள், என்ன மேடம் புதுக் கணவரோடு ஹனிமூனுக்கு கிளம்பிட்டீங்களா என கேட்டு வருகின்றனர். ஆனால் இந்த போட்டோ எப்போது எடுத்தது என்ற தகவல் வெளியாக வில்லை. அமலா பாலுடன் நடந்த திருமண போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பாவ்னிந்தர் சிங், அதனை உடனடியாக நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.