»   »  கோர்ட்டில் பார்த்தும் பார்க்காததுபோன்று பேசாமல் முகத்தை திருப்பிய அமலா, விஜய்

கோர்ட்டில் பார்த்தும் பார்க்காததுபோன்று பேசாமல் முகத்தை திருப்பிய அமலா, விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அமலா பாலும், இயக்குனர் விஜய்யும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ய குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்தபோது ஒருவரையொருவர் பார்த்தும் பார்க்காதது போன்று இருந்ததுடன் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லையாம்.

நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல். விஜய்யின் தெய்வத் திருமகள் படத்தில் நடித்தபோது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான இரண்டே ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

தனி வாழ்க்கை

தனி வாழ்க்கை

கருத்து வேறுபாடு காரணமாக அமலா பால், விஜய் பிரிந்து தனித் தனி வீடுகளில் வசித்து வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகும் அமலா தொடர்ந்து படங்களில் நடித்து வருவது தான் அவர்களின் பிரிவுக்கு காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இதை விஜய் மறுத்தார்.

விவாகரத்து

விவாகரத்து

அமலா பாலும், விஜய்யும் சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இருவரும் தனித் தனி கார்களில் வந்தனர். நீதிமன்றத்தில் 15 நிமிடங்கள் இருந்தபோதிலும் இருவரும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.

அமலா பால்

அமலா பால்

காதலித்தபோது எப்படி எல்லாம் மணிக்கணக்கில் பேசி இருப்பார்கள். இப்போது ஒருவரையொருவர் பார்த்தும் பார்க்காதது போன்று ஒரு வார்த்தை கூட பேசாமல் உள்ளார்களே என நீதிமன்றத்தில் இருந்தவர்கள் கிசுகிசுத்தனர்.

தோல்வி

தோல்வி

அமலா பாலையும், விஜய்யையும் சேர்த்து வைக்க அவர்களின் நண்பர்கள் பெருமுயற்சி செய்தும் முடியவில்லை. பிரிவது என்ற முடிவில் இருந்து அவர்கள் மாறுவதாக இல்லையாம்.

English summary
Actress Amala Paul and director AL Vijay avoided talking while they were in the court to file for divorce.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil