»   »  நிவின் பாலி படத்தில் இருந்து வெளியேறிய அமலா பால்: டேட்ஸ் இல்லையாம்

நிவின் பாலி படத்தில் இருந்து வெளியேறிய அமலா பால்: டேட்ஸ் இல்லையாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நிவின் பாலி படத்தில் இருந்து வெளியேறிய அமலா பால்: டேட்ஸ் இல்லையாம்- வீடியோ

திருவனந்தபுரம்: நிவின் பாலி நடித்து வரும் காயம்குளம் கொச்சுன்னி படத்தில் இருந்து வெளியேறியுள்ளார் நடிகை அமலா பால்.

ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடித்து வரும் மெகா பட்ஜெட் படம் காயம்குளம் கொச்சுன்னி. இருப்பவர்களிடம் இருந்து பறித்து இல்லாதவர்களுக்கு கொடுத்தவரின் கதை.

காதல், குடும்ப படங்களில் நடித்து வந்த நிவின் பாலி இந்த படம் மூலம் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

விலகல்

விலகல்

காயம்குளம் கொச்சுன்னி படத்தின் ஹீரோயின் அமலா பால் திடீர் என்று படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். டேட்ஸ் பிரச்சனையால் படத்தில் நடிக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 3 படங்களில் நடிப்பதால் நிவின் பாலி படத்திற்காக பல்காக டேட்ஸ் கொடுக்க முடியவில்லையாம்.

நிவின் பாலி

நிவின் பாலி

காயம்குளம் கொச்சுன்னி படத்தில் இருந்து அமலா பால் விலகியதை அடுத்து ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் ப்ரியா ஆனந்துக்கு நிச்சயம் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

36 வயதினிலே

36 வயதினிலே

ஜோதிகாவின் 36 வயதினிலே பட இயக்குனர் தான் காயம்குளம் கொச்சுன்னி படத்தை இயக்கி வருகிறார். அவர் படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

காயம்குளம் கொச்சுன்னி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யாவும், ஜோதிகாவும் சேர்ந்து வெளியிட்டனர். இதற்காக அவர்கள் ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Amala Paul has walked out of Nivin Pauly starrer Kayamkulam Kochunni citing dates issue. Priya Anand has replaced Amala Paul. Amala Paul is not able to give bulk dates to the movie as she is doing three movies in a row.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil