அமரர் கல்கியின் குடும்பத்தினருக்கு பொன்னியின் செல்வன் டீம் கொடுத்த சர்ப்ரைஸ்... ரசிகர்கள் பாராட்டு

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..

இந்தத் திரைப்படம் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது.

தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கியமான ஆளுமையாக வாசகர்களால் கொண்டாடப்படுபவர் அமரர் கல்கி.

கொண்டாட்டத்தில் பொன்னியின் செல்வன் ரசிகர்கள்

கொண்டாட்டத்தில் பொன்னியின் செல்வன் ரசிகர்கள்

தமிழ்த் திரையுலகின் அரை நூற்றாண்டு கால கனவுப் படமான பொன்னியின் செல்வன், மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதில், முதல் பாகம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு சிறப்பான திரை விருந்தை படைத்துள்ளது. உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன், முதல் இரண்டு நாட்களில் மட்டும் 150 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது.

அமரர் கல்கியின் குடும்பத்துக்கு கவுரவம்

அமரர் கல்கியின் குடும்பத்துக்கு கவுரவம்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதால், சினிமா ரசிகர்கள், இலக்கிய வாசகர்கள் என அனைவரும் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். அதிகமான தமிழ் வாசகர்களால் வாசிக்கப்பட்ட நாவல் என்ற கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு உண்டு. அதேபோல், தமிழகத்தில் நடைபெறும் அனைத்து புத்தகக் காட்சியிலும் அதிகம் விற்பனையாகும் நூல் என்ற பெருமையும் பொன்னியின் செல்வன் நாவலுக்கே சொந்தம். இந்நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழுவினர் அமரர் கல்கியின் குடும்பத்தினரை ரசிகர்கள் முன்னிலையில் கவுரவித்துள்ளனர்.

கனவு நனவான தருணம்

கனவு நனவான தருணம்

பொன்னியின் செல்வன் படத்தை அமரர் கல்கியின் குடும்பத்தினருக்கு ஸ்பெஷலாக திரையிட்டுக் காட்டியுள்ளனர். மேலும், அவர்களை ரசிகர்கள் முன்னிலையில் மேடையேற்றி கவுரவப்படுத்தினர். பொன்னியின் செல்வன் படக்குழுவினரின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும், அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் நாவல் 1951 முதல் 1954 வரை ஒவ்வொரு பாகங்களாக வெளிவந்த இந்த நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என எம்ஜிஆர், கமல் உள்ளிட்ட பலரும் முயற்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கல்கிக்கு மணிரத்னத்தின் நன்றி

கல்கிக்கு மணிரத்னத்தின் நன்றி

முன்னதாக அமரர் கல்கியின் 123வது பிறந்தநாளான செப்டம்பர் 9ம் தேதி பொன்னியின் படக்குழு சிறப்பு வீடியோவை வெளியிட்டிருந்தது. அதில், எழுத்தாளகள் கெளரி ராமநாராயணன், பாரதி பாஸ்கர், கார்த்திகேயன், பாம்பே கண்ணன் ஆகியோர் கல்கியின் எழுத்தையும் பொன்னியின் செல்வன் நாவலையும் பற்றி விவரித்து பேசியுள்ளனர். இந்த பொன்னியின் செல்வன் நாவலுக்காக அமரர் கல்கிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X