For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அமேஸானில் நேரடியாக வெளியாகும் முதல் தமிழ் படம் பொன்மகள் வந்தாள்.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

  |

  சென்னை: பொன்மகள் வந்தாள் திரைப்படம் நாளை அமேஸான் பிரைமில் வெளியாக உள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

  இந்நிலையில் பொன்மகள் வந்தாள் படம் குறித்து அமேஸான் ப்ரைம் தளம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது,

  Amazon has released a statement about Ponmagal Vandhal movie

  பெரும் எதிர்பார்பிற்குள்ளாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை வெளியிட அமேஸான் பிரைம் தயாராகியுள்ளது.

  பரபரப்பான இந்த சட்ட நாடகம் பிரைம் வீடியோவில் உலகளாவிய அளவில் நேரிடையாக வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படமாகும். இது, தவறாக தண்டனை அளிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நீதியை வழங்கிடப் போராடும் ஒரு நேர்மையான பெண் வழக்கறிஞரின் கதையாகும்.

  2டி எண்டர்டெயின்மெண்டால் தயாரிக்கப்பட்டுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில், ஜோதிகா, பார்த்திபன், கே.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

  Amazon has released a statement about Ponmagal Vandhal movie

  மும்பை, இந்தியா, 28 மே, 2020 - அமேசான் பிரைம் வீடியோ இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் நீதிமன்ற நாடகப் படமான பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை மே 29 அன்று வெளியிட தயாராகவுள்ளது. இது, ஒரு நேர்மையான வழக்கறிஞர், தவறாக தண்டிக்கப்பட்ட, ஒரு அப்பாவி பெண்ணை விடுவிக்க முயற்சிக்கும் கதையாகும். 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த சட்ட நாடகப் படத்தில், ஜோதிகா, பார்த்திபன், கே.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் உட்பட பல்வேறு ஆற்றல் மிக்க நடிகர்கள் உள்ளனர். அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக உலகளவில் திரையிடப்படவுள்ள முதல் தமிழ் படமாகத் திகழவுள்ள பொன்மகள் வந்தாள், பிரைம் உறுப்பினர்களுக்கு 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ஸ்ட்ரீம் செய்ய பிரத்தியேகமாக கிடைக்கும்.

  இது குறித்துப் பேசிய நடிகை ஜோதிகா அவர்கள், "பொன்மகள் வந்தாள் 2020 மே 29 ஆம் தேதி டைரகட்-டு-ஸ்ட்ரீமில் வெளியிடப்படும் முதல் தமிழ் படம் என்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். ஒவ்வொரு நடிகரும் தங்கள் நடிப்பை அதிக உயரத்திற்கு கொண்டு செல்லும் சவாலான பாத்திரங்களைத் தேடுவார்கள் மற்றும் இதில் எனது வெண்பா கதாபாத்திரம் எனது சிறந்த நடிப்பினை வெளிக்கொணர்ந்துள்ளது.

  Amazon has released a statement about Ponmagal Vandhal movie

  நீதிக்காக எந்தவொரு எல்லைக்கும் போகத் தயாராக உள்ள ஒரு வலுவான பெண் கதாபாத்திரத்தை சித்தரிக்கும் இந்த திரைப்படத்தை நடித்தது எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது. அமேசான் பிரைம் வீடியோவின் விரிவான அடைதலுடன், தமிழ் திரைப்பட ஆர்வலர்களும் உலகளாவிய பார்வையாளர்களும் இந்தப்படத்தை பார்க்கையில், நிச்சயம் தங்கள் இருக்கையின் நுனிக்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார்.

  "ஒவ்வொரு நடிகரும் தங்களை முழுமையாக அர்பணிக்கத்தக்க படங்களை தங்கள் வாழ்வில் சந்திப்பர். இது ஜோதிகாவுக்கு அத்தகையதொரு படம் ஆகும். ஒரே படத்தில் 5 மூத்த நடிகர்களுடன் பணியாற்றுவதில் அவர் மிகவும் உற்சாகமடைந்தார். ஒரு இளம் இயக்குனர் தனது திரைவாழ்வில் ஆரம்பகட்டத்தில், இவ்வளவு தீவிரமான கதையை எங்களிடம் கொண்டு வந்துள்ளது பாராட்டுதலுக்கு உரியதாகும். இந்த தொற்றுநோயின் சோதனையான காலகட்டத்திலும், பொருத்தமானதாக உணரக்கூடிய வகையில் பாத்திரத்தையும், கதையையும் ஃபிரெட்ரிக் எழுதியுள்ளார்.

  Amazon has released a statement about Ponmagal Vandhal movie

  எந்தவொரு படமும் வெளியிடப்படும்போது, பார்வையாளர்களை சிந்திக்க அல்லது விவாதிக்க வைக்கும் விஷயங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். ஜோவின் திரைப்படங்கள் சமூகத்தின் நல்வாழ்வுக்காக அதை மீண்டும் மீண்டும் செய்துள்ளன. படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தவுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நானும் த்ரில்லர்களின் மிகப்பெரிய ரசிகன், இந்த படம் பார்வையாளராகவும் தயாரிப்பாளராகவும் என்னை திருப்திப்படுத்தியுள்ளது.

  இந்த உள்ளடக்கத்தை 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் எடுத்துச் செல்லும் அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறினார், பிரபலமான நடிகர்-தயாரிப்பார் திரு.சூர்யா அவர்கள்.

  Amazon has released a statement about Ponmagal Vandhal movie

  ஜேஜே. ஃபெட்ரிக் அவர்களால் இயக்கப்பட்டுள்ள இந்த பரபரப்பான திரைப்படம், கடத்தல் மற்றும் கொளைகளுக்கான தண்டணையளிக்கப்பட்ட, தொடர் கொலையாளி 'சைக்கோ ஜோதி' சம்பந்தப்பட்ட ஒரு 2004 - ஆண்டு வழக்கை, மீண்டும் துவக்கும் 'பெட்டிஷன்' பெதுராஜ் என்ற ஊட்டியில் வசிப்பவரின் கதையாகும்.

  அவரது மகளான வெண்பா ஒரு தீவிரமான வழக்கறிஞர் ஆவார். உண்மையை வெளிப்படுத்த அனைத்து நெளிவுசுளிவுகளிலும் பயணிக்கும் திறன் கொண்ட அவர் எவ்வாறு அதில் வெற்றி பெறுகிறார் என்பதே இதன் மையக்கருவாகும்.மே 29 முதல், பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை அமேஸான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யுங்கள்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  English summary
  Amazon has released a statement about Ponmagal Vandhal movie. Ponmagal Vandhal movie will be releasing on Amazon prime on Tomorrow.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X