»   »  இளையராஜா - பி.சி.ஸ்ரீராம் - கமலுடன் இணையும் வாய்ப்பை மறுத்தேன்! - அமீர்

இளையராஜா - பி.சி.ஸ்ரீராம் - கமலுடன் இணையும் வாய்ப்பை மறுத்தேன்! - அமீர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளையராஜா - பி.சி.ஸ்ரீராம் - கமலுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தும் மறுத்தேன் என்று தெரிவித்தார் இயக்குநர் அமீர்.

சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் போன்ற படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் புதிய படம் 'சத்ரியன்'.

Ameer's dream to join with Ilaiyaraaja, Kamal Hassan, PC Sriram

இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. இதில், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, தியாகராஜன், இயக்குநர் அமீர், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் அமீர் பேசும்போது, "என்னுடைய முதல் படத்தில் இருந்து யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்றி வருகிறேன். எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. அது என்னவென்றால், இளையராஜா - பி.சி.ஸ்ரீராம் - கமல் இவர்கள் மூன்று பேரையும் வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதுதான். அப்படியொரு வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. ஆனால், அதை நான் நிராகரித்து விட்டேன்.

இவர்கள் மூவருமே ஜாம்பவான்கள். இவர்களைக் கையாள்வது கடினமும் கூட. ஆனாலும் இவர்களுடன் இணைய வேண்டும் என்ற கனவு நிறைவேறும் என்று நம்புகிறேன்.

பருத்தி வீரன் படத்துக்காக 'அறியாத வயசு...' பாடலை இளையராஜா பாடிக் கொடுத்தார். அதில் ஒரு திருத்தம் செய்ய வேண்டியிருந்தது. ராஜா சாரிடம் அதைச் சொல்ல நான் பயந்தேன். பின்னர் தயக்கத்துடன் சொன்னேன். அவரும் செய்து கொடுத்தார்," என்றார்.

English summary
Director Ameer says that he has a dream to join with legends like Ilaiyaraaja, PC Sriram and Kamal Hassan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil