»   »  தொடர்ந்து மூன்றாவது ஆண்டு... மெக்காவில் இயக்குநர் அமீர்!

தொடர்ந்து மூன்றாவது ஆண்டு... மெக்காவில் இயக்குநர் அமீர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் புனித இடம் மெக்கா. தன் வாழ்நாளில் ஒருமுறையாவது இங்கே சென்று வந்துவிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவர்கள் மதக் கோட்பாடும் கூட...

திரை நட்சத்திரங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நம்ம தமிழ் சினிமா இயக்குநர் அமீர் இந்த ஆண்டு மூன்றாவது முறையாக மெக்கா சென்றிருக்கிறார். அதுவும் தொடர்ச்சியாக!

Ameer's hat trick visit to Mecca

ரமலான் அன்று மெக்காவில் தொழுகை மேற்கொள்வது ரொம்பவே ஸ்பெஷல். எனவே ஆண்டுதோறும் ரமலானுக்கு அங்கே விசிட் அடித்துவிடுகிறார் அமீர்.

அமீர் அடுத்து ஆர்யாவை வைத்து படம் இயக்கவிருக்கிறார். சர்வதேச டான் பற்றிய கதையான இது, ஆர்யாவை இதுவரை பார்த்திராத அளவுக்கு ஸ்டைலிஷாகக் காட்டுமாம்.

மஞ்சப்பை ராகவன் இயக்கும் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றிருக்கும் ஆர்யா அடுத்த வாரம் தாயகம் திரும்புகிறார். அதோடு அந்த படம் முடிவடைதவதால் அமீர் பட ஷூட்டிங் விரைவில் துவங்கும்.

ஆர்யா தவிர மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

English summary
Director Ameer has visited Mecca for the third time consecutively to celebrate Ramadan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil