உன்னிடம் தவறாக பழகவில்லை...பாவ்னியிடம் பதறும் அமீர்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ன் 65 வது நாளான நேற்று, பாவ்னியிடம் நான் உங்களின் தீவிர ரசிகன். பாவ்னியிடம் கலாட்டா செய்து விளையாடுவது எனக்கு பிடித்திருக்கிறது. மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நான் ஏன் பாவ்னியுடன் பேசுவதை நிறுத்த வேண்டும் என பிரியங்கா, ராஜு ஆகியோரிடம் பேசினார் அமீர்.
இந்நிலையில் 66 வது நாளான இன்று நடைபெற்ற கேம்ஷோவின் போது சஞ்சீவ், பாவ்னி- அமீர் மற்றும் பாவ்னி - அபினய் உறவு பற்றி நேரடியாக பல கருத்துக்களை முன்வைத்தார். இதை வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மேட்களும் சரி என ஏற்றனர்.

நான் தவறாக பழகவில்லை
இதைத் தொடர்ந்து டாஸ்க் முடிந்ததும் பாவ்னியை தனியே அழைத்து, பதற்றத்துடன் விளக்கம் கொடுக்கிறார் அமீர். அப்போது அவர், நான் உன்னை தவறாக நினைத்து பழகவில்லை. நமக்குள் யதார்த்தமாக ஒரு ஃபிரண்ட்ஷிப் உருவாகி உள்ளது. நீ அபினய்யிடம் மட்டுமல்ல என்னுடன் பேசுவதையும் மற்றவர்கள் தவறாக நினைத்து பேச துவங்கி விட்டனர் என்றார்.

சந்தேகப்படுறியா
அதற்குள் பாவ்னி, நமக்குள் நல்ல ஃபிரண்ட்ஷிப் இருக்கு. அதை நான் மதிக்கிறேன். உன்னை நான் தவறாக நினைக்கவே இல்லை. நீ என்னை தவறாக நினைத்து பழகுவதாக நான் நினைப்பதாக நீ சந்தேகப்படுகிறாயா என கேட்டார். மற்றவர்களுக்கு தவறாக தெரிந்தால் தெரியட்டும் என வெளிப்படையாக பேசுகிறார்.

பெயர் கொடுக்க அவசியமில்லை
நீ எனக்கு ஜாலியான ஃபிரண்ட். அது நமக்கு தெரியும். உன் விஷயத்தில் எனக்கு மன வருத்தம் ஏற்படவேயில்லை. இந்த ஃபிரண்ட்ஷிப்பிற்கு நான் பெயர் கொடுக்கவே தேவையில்லை. ஆனால் அபினய்யுடன் நான் பழகுவதை மற்றவர்கள் தவறாக பேசுவது தான் எனக்கு கஷ்டமாக உள்ளது என்கிறார் பாவ்னி.

எச்சரித்த அண்ணாச்சி
அதே சமயம், நான் உன்னிடம் ஓவராக விளையாடி விட்டனோ என எனக்கு தோன்றுகிறது என வருத்தத்துடன் பேசுகிறார் அமீர். அண்ணாச்சி கூட என்னிடம் கூப்பிட்டு பேசினார். ஆனால் தவறாக எண்ணத்தில் சொல்லவில்லை. ஆனால் நீ ஜாலியாக விளையாடுவது ஏதாவது ஒரு இடத்தில் தப்பாக போய் விடலாம் என்று தான் சொன்னார் என்கிறார்.

யாருடன் பேசினாலும் லவ்வா
நான் யாருடன் பேசினாலும் லவ் பண்றதாக தான் சொல்கிறார்கள். அபினய் இடம் பேசும் போது இப்படி பேசுவது தான் நிஜமாக வலிக்கிறது. உனக்கு என் ஃபிரண்ட்ஷிப் பிடிச்சிருக்கு. எனக்கு உன் ஃபிரண்ட்ஷிப் பிடிச்சிருக்கு. இதில் யார் வருத்தம் படுவது பற்றி எனக்கு கவலையில்லை. உன் கூட பேசுவதால் அபினய் கூட வருத்தப்பட கூடாது. ஏனென்றால் உனக்கு முன்பே அபினய்யை எனக்கு தெரியும் என்கிறார்.


Click it and Unblock the Notifications











