டைட்டில் கிடக்கட்டும்ப்பா... பாவ்னி மனதை வெல்ல போவது யார்...பிக்பாஸில் போட்டா போட்டி

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 65 வது நாளான இன்று ஆரம்பத்திலேயே பாவ்னி, அக்ஷரா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காயின் பவரை பயன்படுத்தி அமீரிடம் இருந்து கேப்டன் பதவியை பறித்ததால் பாவ்னிக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த வாரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு தேவையான உதவிகளை பாவ்னி செய்ய வேண்டும்.

இதற்காக பாவ்னி, அக்ஷராவிடம் பேசிய போது தான் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று நடந்த டாஸ்கின் தொடர்ச்சியாக இந்த பிரச்சனை நடைபெற்றுள்ளது. இந்த பிரச்சனை பற்றி பாவ்னி, அபினய்யிடம் கூறுகிறார். அவர் பாவ்னியை சமாதானம் செய்கிறார்.

இதுக்கு கூட போட்டியா

இதுக்கு கூட போட்டியா

இதனைத் தொடர்ந்து ராஜு மற்றும் அமீர் ஆகியோர் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அமீர், கலைந்திருந்த பாவ்னியின் புடவையை சஞ்சீவ் சரி செய்து விட்டதால் அவள் இம்ப்ரஸ் ஆகி விட்டாளாம். அதனால் நான் பிரியங்காவை கூப்பிட்டு, அவளின் புடவையை கலைத்து விடு, நானும் சரி செய்து நல்ல பெயர் வாங்குகிறேன் என்றேன். பிரியங்காவும் தம்பிக்கு நான் ஹெல்ப் செய்கிறேன் என்றாள். அப்போது இருந்து அபினய்யின் முகம் மாறி விட்டது. நான் விளையாட்டிற்கு செய்ய ஆரம்பித்ததை அவன் சீரியசாக எடுத்துக் கொண்டான் என ராஜுவிடம் சொல்கிறார்.

கடுப்பாகும் அபினய்

கடுப்பாகும் அபினய்

அதற்கு ராஜு, நான் தான் தவறாக பார்க்கிறேனோ என எனக்கு தோன்றியது. உங்களுக்கும் அப்படி தோனுது தானே என அமீரிடம் கேட்கிறார். அதற்கு முதலில் தயக்கத்துடன் பேச துவங்கும் அமீர், கொஞ்ச நாட்களாக அவள் என்னை கூப்பிட்டு பேசுகிறாள். அது அவனுக்கு பிடிக்கவில்லை. இதை பாவ்னியிடம் சொல்லலாம் என போய் விட்டு விட்டேன். எதற்காக நான் சொல்ல வேண்டும் என தோன்றியது. அதனால் சொல்லாமல் விட்டு விட்டேன்.

 ராஜுகிட்ட ஏதோ இருக்கு

ராஜுகிட்ட ஏதோ இருக்கு

அவன் என்ன நினைப்பில் பார்க்கிறான் என எனக்கு தெரியாது. அப்படி இருக்கையில் நான் எப்படி அவனை பற்றி பாவ்னியிடம் சொல்ல முடியும். என்னிடம் கூட ராஜு கேட்டது உங்களுக்கு தவறாக தோன்றவில்லையா என கேட்டாள். அப்போது கூட நான், அவனிடம் ஏதோ ஸ்டிராங்காக இருக்கு அதனால் தான் அவன் அப்படி கேட்டிருக்கிறான் என்றேன். ஆனால் நீங்க என்ன வச்சிருக்கீங்க. என்ன பார்த்தீங்க என எனக்கு தெரியாது. நீங்க கெஸ் பண்ணுனீங்களா என்கிறார்.

புட்டுபுட்டு வைக்கும் ராஜு

புட்டுபுட்டு வைக்கும் ராஜு

அப்போது ராஜு, ஒருவரை முதலில் ஒரு எண்ணத்துடன் பார்த்து விட்டால் அதற்கு பிறகு அவர்களை பார்க்கும் போதெல்லாம் அது தான் தோன்றும். அதை மாற்றுவது ரொம்ப கஷ்டம். அதற்க பிறகு அவர்கள் என்ன செய்தாலும் இப்படி நினைத்து தான் பண்ணுகிறார்கள் என தோன்றும். இதை நான் நேரடியாக கேட்கவில்லை. ஆனால் அவர் நூறு சதவீதம் செய்கிறார். சோகமாக இருப்பவர்களிடம் எல்லாம் பேசுவதாக சொல்கிறார். அதை அவர் செய்கிறார். தாமரையிடம் கூட போய் பேசினார். அப்போது, நல்ல மனுஷனா இருக்கார் நாம் தான் தவறாக நினைத்து விட்டோம் என நினைத்தேன். ஆனால் தாமரையிடம் அவர் நடந்து கொள்வது வேறு விதமாக இருக்கிறது என்கிறார்.

அப்போ அது உண்மை தானா

அப்போ அது உண்மை தானா

அதற்கு அமீரும், அப்படியானால் எனக்கு தோன்றியது தான் உங்களுக்கும் தோன்றி உள்ளது. ஆனால் எதுவும் முழுவதுமாக தெரிந்து கொள்ளாமல் பேச கூடாது என்பதால் நானும் விட்டு விட்டேன். நேற்று அவர் தான் என்னை நாமினேட் செய்திருப்பார் என தோன்றுகிறது என்கிறார். ராஜுவும், அதற்கு வேறு ஏதாவது காரணம் சொல்லி இருப்பார் என்கிறார்.

நேரடியாக கேட்ட ராஜு

நேரடியாக கேட்ட ராஜு

நீங்க பாவ்னியிடம் எப்படி பழகுகிறீர்கள். அவளுடன் தான் அதிக நேரம் இருக்கிறீர்கள். இதை நான் எப்படி பார்ப்பது என அமீரிடம் ஓப்பனாகவே கேட்கிறார் ராஜு. அதற்கு அமீர், நான் ஜாலியாக தான் பழகுகிறேன். ஒரு பையன், ஒரு பொண்ணை பார்த்தால் எப்படி கலாட்டா பண்ணுவானோ அது போல தான் நான் பழகுகிறேன். வேறு எதுவும் மனதில் இது வரை முடிவு செய்யவில்லை. ஆனால் அவளை நோன்டிக் கொண்டே, விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது. கிண்டலடித்து விளையாடிக் கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் அவளும் சீரியசாகி விடுகிறாள். அந்த சமயத்தில் நான் அவாய்ட் செய்து விட்டு வந்து விடுகிறேன்.

ஓப்பனாக பேசிய அமீர்

ஓப்பனாக பேசிய அமீர்

முதல் நாளே எல்லோரும் என்னை கிண்டலடித்ததால் வேண்டாம் எதற்காக அவளுடன் பேசி, கலாட்டா செய்து கொண்டிருக்க வேண்டும் என நினைத்தேன். வெளியிலும் என்ன தோன்றும் என நினைத்தேன். பிறகு என்ன தோன்றினால் என்ன எனக்கு பிடிச்சிருக்கு நான் விளையாடுறேன் என்ற மனநிலைக்கு வந்து விட்டேன். ஆனால் நான் விளையாடுவது அவருக்கு பிடிக்கவில்லை என எனக்கு தெரிந்தது. இரண்டு முறை வெளியிலும் அதை காட்டி விட்டார். ஆனால் அவருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நான் ஏன் பேசாமல் இருக்க வேண்டும் என வெளிப்படையாக பதிலளிக்கிறார் அமீர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X