twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கைதட்டுனா கொரோனா வைரஸ் செத்துடுமா.. என்ன அமிதாப் சார் இதெல்லாம்.. நீக்கப்பட்ட அமாவாசை ட்வீட்!

    |

    மும்பை: கொரோனா வைரஸ் குறித்த சர்ச்சையான ட்வீட்டை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நீக்கியுள்ளார்.

    மார்ச் 22ம் தேதி மாலை 5 மணிக்கு, அனைவரும் வீட்டுக்கு வெளியே வந்து ஒலி எழுப்பினால், வைரஸ் உள்ளிட்ட தீய சக்திகள் அழிந்துவிடும் என்றும்,

    Amitabh Bachchan Deletes Controversial Amavasya Tweet

    அமாவாசை நாளில் கெட்ட சக்திகள், வைரஸ் உள்ளிட்டவற்றின் வீரியம் அதிகரிக்கும், அதற்கு எதிராகத்தான் தான் அனைவரும் கைதட்டுதல், ஒலி எழுப்புதல் போன்றவற்றை செய்து வைரஸை விரட்ட வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். அப்படி கைதட்டுவதன் மூலம், ரத்த ஓட்டமும் சீராகி உடலுக்கு உறுதியை கொடுக்கும் என்று தனது ட்வீட்டில் அமிதாப் பச்சன் பதிவிட்டு இருந்தார்.

    அமிதாப் பச்சனின் இந்த மூட நம்பிக்கையான ட்வீட்டை பார்த்த பலரும் தொடர்ந்து விமர்சனம் செய்ய, அமிதாப் பச்சன் அந்த ட்வீட்டை நீக்கி உள்ளார்.

    கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரதமர் நரேந்திர மோடி, கேட்டுக் கொண்டதன் பேரில் நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு பின்பற்றப்பட்டுள்ளது. மேலும், மாலை 5 மணிக்கு, கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களை பாராட்டி கரவொலிகளை எழுப்புமாறும் கேட்டுக் கொண்டார்.

    ஆனால், இந்த கைதட்டல் விஷயம், மூட நம்பிக்கையுடன் கைகோர்த்துக் கொண்டு வாட்ஸப் வதந்தியாக பரவியது.

    இந்தியாவின் மிகப்பெரிய நடிகரான அமிதாப் பச்சன், அந்த விஷயத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியது.

    Amitabh Bachchan Deletes Controversial Amavasya Tweet

    முன்னதாக, ரஜினிகாந்த், பவன் கல்யாண், 14 மணி நேரம் வீட்டில் அடைந்து கிடந்தால், கொரோனா வைரஸ் வீரியம் குறைந்துவிடும் என போட்ட ட்வீட்களை ட்விட்டர் இந்தியா டெலிட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பிரபலங்கள் மூலம் விழிப்புணர்வு கொடுத்தால், சீக்கிரம் பரவும் என்பதால், இது போன்ற சென்சிட்டிவ்வான விஷயங்களை பகிரும் போது, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது மிக மிக அவசியம்.

    English summary
    After being savaged on social media, actor Amitabh Bachchan on Monday deleted a tweet and Instagram post on the alleged bacteria-destroying powers of noise.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X