»   »  இந்தியில் ரீமேக்காகும் கபாலி... ‘மகிழ்ச்சி’யாக ‘நெருப்புடா’ சொல்லப் போகும் அமிதாப்?

இந்தியில் ரீமேக்காகும் கபாலி... ‘மகிழ்ச்சி’யாக ‘நெருப்புடா’ சொல்லப் போகும் அமிதாப்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீசாகி, வசூல் மழை பொழிந்து வரும் கபாலி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த ரீமேக்கில் ரஜினியின் கபாலி கதாபாத்திரத்தில் அமிதாப் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் மலேசிய டான் ஆக ரஜினி நடித்துள்ளார்.

பர்ஸ்ட் லுக், டிரைலர், பாடல்கள், டிக்கெட் விற்பனை எனப் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள இப்படம், கலவையான விமர்சனங்களுடன் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடி வருகிறது.

பல மொழிகளில் கபாலி...

பல மொழிகளில் கபாலி...

இந்தப் படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், மலாய் போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளது. இது தவிர சைனீஸ், தாய், ஜப்பான், இந்தோனேசிய மொழிகளிலும் கபாலி டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

இந்தியில் ரீமேக்...

இந்தியில் ரீமேக்...

இந்நிலையில், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. கடந்த வெள்ளியன்று மும்பை உள்ளிட்ட பகுதிகளிலும் கபாலி ரிலீசானது. அதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கபாலியை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கபாலியாகும் அமிதாப்...

கபாலியாகும் அமிதாப்...

அப்படியே டப்பிங் செய்து வெளியிடுவதை விட, ரீமேக் செய்தால் பாலிவுட் ரசிகர்கள் ஆர்வமாக பார்ப்பார்கள் என்பது அங்குள்ள படத்தயாரிப்பாளர்களின் திட்டமாம். எனவே, இப்படத்தில் அமிதாப்பை கபாலியாக்க அவர்கள் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

நல்ல நண்பர்கள்..

நல்ல நண்பர்கள்..

அமிதாப்பும், ரஜினியும் நல்ல நண்பர்கள் என்பது ஊரறிந்த விசயம். அதுமட்டுமின்றி அமிதாப் பலமுறை தன்னை ரஜினியின் ரசிகர் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, இருவரும் சேர்ந்தும் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
To ensure Rajinikanth's Kabali gets its due in Hindi-speaking regions; plans are reportedly on to make a Bollywood remake with Amitabh Bachchan in the lead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil