Just In
Don't Miss!
- Lifestyle
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹேர்ஸ்டைல் பஞ்சாயத்து: இளம் ஹீரோவுக்கு ஆதரவாக களமிறங்கிய, அம்மா!
திருவனந்தபுரம்: மலையாள இளம் ஹீரோ ஷேன் நிகமுக்கு வழங்கப்பட்ட தடையை நீக்க கோரி, பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது கேரள நடிகர்கள் சங்கமான, அம்மா.
மலையாள சினிமாவின் இளம் ஹீரோ ஷேன் நிகம். இஷ்க், கும்பளங்கி நைட்ஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ள ஷேன், வெயில், குர்பானி ஆகிய படங்களில் நடித்து வந்தார். 'வெயில்' படத்துக்கு தலைமுடியை அதிகமாக வளர்க்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.
படப்பிடிப்பு முடியும் வரை அதை வெட்டக் கூடாது. ஷூட்டிங் தொடங்கி நடந்துகொண்டிருந்த நிலையில், திடீரென்று தனது ஹேர்ஸ்டைலை வெட்டி, அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் நிகம்.

இதனால் இயக்குனர் சரத் மற்றும் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் அதிர்ச்சி அடைந்தனர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார் ஜார்ஜ். பிறகு இந்தப் பிரச்னை சங்கத்தில் பேசி தீர்க்கப்பட்டது. 'இனி கெட்டப்பை மாற்ற மாட்டேன்' என்று உறுதி அளித்திருந்தார் நிகம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், தயாரிப்பாளர் சங்கத்திடம் அளித்த உறுதியை மீறி, புதிய கெட்டப்பை வெளியிட்டார் நிகம். அதில், தலைமுடியை, மண்டையின் இரண்டு பக்கமும் நன்றாக ஷேவ் செய்திருந்தார்.
நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. அவர காயப்படுத்தாதீங்க.. லாஸை எச்சரித்த நெட்டிசன்ஸ்!
இதனால் ஆத்திரமடைந்த ஜார்ஜ், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மீண்டும் புகார் செய்தார். விசாரித்த சங்க நிர்வாகிகள், ஷேன் நிகமுக்குத் தடைவிதித்தனர். அவர் நடித்த வெயில், குர்பானி படங்கள் கைவிடப்படுவதாகவும் அந்தப் படங்களுக்காகச் செலவழிக்கப்பட்ட ரூ.7
கோடியை ஷேன் நிகம் திருப்பித் தர வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.
இந்நிலையில், இந்தப் பிரச்னையில் தலையிட, மலையாள நடிகர்கள் சங்கமான, அம்மா முடிவு செய்திருக்கிறது. அதற்கு முன், மலையாள நடிகர் சங்கத்தில், தான் நடிக்கும் படங்களை உடனடியாக முடித்துக்கொடுக்க சம்மதித்துள்ளார் ஷேன் நிகம். இதனால் இந்த பேச்சுவார்த்தை வரும் வியாழக்கிழமை நடக்க இருக்கிறது.
நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. அவர காயப்படுத்தாதீங்க.. லாஸை எச்சரித்த நெட்டிசன்ஸ்!
இதற்கிடையே, 'வெயில்' படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் சரத், இது என் கனவு படம். இந்தப் படத்தை ஷேன் நிகம் முடித்துக்கொடுக்க வேண்டும். 75 சதவிகித படம் முடிந்துவிட்டது. அவர் சரியாக ஒத்துழைப்புக் கொடுத்தால் 15 நாட்களில் படம்
முடிந்துவிடும். இந்த பிரச்னையில் மலையாள திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு தலையிட்டுப் பேசி முடிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். வியாழக்கிழமை நடக்கும் பேச்சுவார்த்தையில் ஷேன் நிகமுக்கான தடை நீக்கப்படும் என்று தெரிகிறது.
நடிகர் ஷேன் நிகம், தமிழில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.