அமிதாப் பச்சன் கடந்த புதிய மைல்கல்! #AB30Million

By Vignesh Selvaraj

மும்பை : பாலிவுட் சினிமாவின் 'பிக் பி' என்று செல்லமாக அழைக்கப்படுபவர் அமிதாப் பச்சன். இவர் படங்களைத் தாண்டி தன்னுடைய ரசிகர்களுடன் ட்விட்டர் மூலம் எப்போதும் தொடர்பில் இருப்பார். தற்போது இவரது ட்விட்டர் பக்கத்தை 30 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

இந்தத் தகவலை ட்வீட் செய்த அமிதாப் பச்சன் மேலும், 'ட்விட்டரில் 30 மில்லியன் ரசிகர்கள் கடந்துவிட்டார்கள். இனிய நினைவுகளும், கசப்புகளுமாக ட்விட்டர் வாழ்க்கை தொடர்கிறது' என உற்சாகமாக ட்வீட் செய்திருக்கிறார்.

amtabh bachchan strikes twitter

30 மில்லியன் ஃபாலோயர்ஸ் கிடைத்ததைக் கொண்டாடும் வகையில் #AB30Million எனும் ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். திரைப் பிரபலங்கள் பலரும் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள்.

மூத்த நடிகராக இருந்தாலும் இளைய தலைமுறையினரைக் கவரும் விதமாக தனது நடிப்பு பற்றியும், சொந்த வாழ்க்கை பற்றியும் அவ்வப்போது ட்விட்டரில் பகிர்ந்துகொள்வதற்கான பலன்தான் இளம் நடிகர்கள் கூட இன்னும் எட்டிப்பிடிக்காத இந்தச் சாதனை தான்.
அமிதாப் பச்சனுக்கு அடுத்த இடத்தில் ஷாருக்கான் 29 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றிருக்கிறார். இன்று அமிதாப் பச்சன் பிறந்தநாள். ஆனால், இந்தப் பிறந்தநாளைக் கொண்டாடப் போவதில்லை என முடிவெடுத்திருக்கிறார் அமிதாப்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X