For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிக்பாஸ் வீட்டுக்குள் கோஷ்டி சேர்க்கும் அமுதவாணன்..அன்பு டீம் லீடர் இவரா?..கதறும் அசீம்,ஏடிகே,விக்ரம

  |

  பிக்பாஸ் வீட்டுக்கு வந்தபோது அனைவருக்கும் நண்பராக விகடகவியாக எந்த பிரச்சினையிலும் சிக்காமல் இருந்த அமுதவாணன் கோஷ்டி சேர்க்கிறார்.

  பிக்பாஸ் வீட்டுக்குள் சீசன் 4-ல் அன்பு டீமும், சீசன் 5-ல் பிரியங்கா டீமும் ஆதிக்கம் செலுத்தியது.

  விஜய் டிவி ஆட்கள் ஆதிக்கம் செலுத்துவது போல் அமுதவாணனும் இம்முறை ஆதிக்க செலுத்த முயல்கிறார்.

   ஒழுங்காக இல்லன்னா ரெட் கார்டு மூலம் அனுப்பிடுவேன்..பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸிடம் சாட்டையை சுழற்றிய கமல் ஒழுங்காக இல்லன்னா ரெட் கார்டு மூலம் அனுப்பிடுவேன்..பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸிடம் சாட்டையை சுழற்றிய கமல்

   பிக்பாஸ் போட்டியாளர்களில் ஆதிக்கம் செலுத்து விஜய் டிவி பிரபலங்கள்

  பிக்பாஸ் போட்டியாளர்களில் ஆதிக்கம் செலுத்து விஜய் டிவி பிரபலங்கள்

  பிக் பாஸ் வீட்டில் அனைத்து விஷயங்களிலும் விஜய் டிவியின் முக்கிய நபர்கள் யாராவது போட்டியாளர்களாக பங்கேற்பார்கள். ஒருவர் அல்லது இருவர் அல்லது அதற்கு மேல் பங்கேற்பார்கள். இவர்கள் பிக் பாஸ் வீட்டில் எப்போதும் ஆதிக்கம் செலுத்துவார்கள். இவர்களை சுற்றியே கூட்டம் இருக்கும். இது ஒவ்வொரு சீசனிலும் நடக்கும் நடைமுறையாகும்.

   சீசன் 4-ல் கொடூரமாக உருவாகிய அன்பு டீம்

  சீசன் 4-ல் கொடூரமாக உருவாகிய அன்பு டீம்


  சீசன் 4, சீசன் 5 இரண்டிலும் இரண்டு இது கொடூரமாக நடந்தது. சீசன் 4-ல் அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ரியோ என பெரிய டீமே இருந்தது. அர்ச்சனாவை சுற்றியே அனைவரும் இயங்கினர். அர்ச்சனா எது சொன்னாலும் அதற்கு ஆமாம் சாமி போட்டனர். இதை தட்டி கேட்ட ஒரே ஒருவர் ஆரி, அவர் ஒதுக்கப்பட்டார். பாலாஜி தனியாக செயல்பட்டார் ஆனாலும் அவரும் ஆரிக்கு எதிராக அர்ச்சனா டீமுடன் சேர்ந்து ஆடினர். இதனால் மொத்தமாக ஓரம் கட்டப்பட்ட ஆரி பின்னர் டைட்டிலை வென்றார். அர்ச்சனா உள்ளிட்ட பலரும் அவமானப்பட்டு வெளியேறினர்.

   சீசன் 5- ல் உருவாகிய அன்புடீம்-மிக்சர் டீம்

  சீசன் 5- ல் உருவாகிய அன்புடீம்-மிக்சர் டீம்

  இதேபோன்று சீசன் ஐந்திலும் பிரியங்கா, ராஜு, சதீஷ், பாவனி, அமீர் உட்பட பல விஜய் டிவி பிரபலங்கள் உள்ளே வந்தனர். முதலில் இவர்கள் ஆதிக்கம் தான் இருந்தது. இவர்களுடன் அபிஷேக் ராஜாவும் சேர்ந்துக்கொள்ள பிக் பாஸ் முழுவதும் எரிச்சலும், கடுமையான சலிப்பும் ஏற்பட்டது. ஒருவர் கூட போட்டி போடாமல் கண்டபடி பேசிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். போட்டிகளும் கடுமையாக இல்லாமல் சாதாரணமாக இருந்தது. இந்த நிலையில் மக்களால் பார்வையாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட சீசன் ஐந்தின் போட்டியாளர் ராஜு எந்த ஆணியும் பிடுங்காமல், மிக்சர் சாப்பிட்டுக் கொண்டே கப்பையும் வென்றார் என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் வைக்கப்பட்டது. கடந்த சீசனில் நடந்த பல்வேறு குளறுபடிகளை கலைந்து 6 வது சீசனை வெகு ஜாக்கிரதையாக பிக் பாஸ் நடத்துகிறார்.

   சீசன் 6-லும் ஆதிக்கம் செலுத்தும் விஜய் டிவி பிரபலங்கள்

  சீசன் 6-லும் ஆதிக்கம் செலுத்தும் விஜய் டிவி பிரபலங்கள்

  6-வது சீசனில் பிக் பாஸில் போட்டியாளர்கள் மீது ஜாக்கிரதையாக தேர்வு செய்யப்பட்டனர். பொதுமக்களில் இருந்து இரண்டு பேரை தேர்வு செய்கிறோம் என்று டிக் டாக் தனலட்சுமி, திருநங்கை ஷிவின் கணேசனையும் தேர்வு செய்தனர். அதேபோன்று ஜி.பி.முத்து, அரசியல்வாதி விக்ரமன் போன்றவரும் இதில் பங்கேற்றதால் ஆரம்பம் முதலே போட்டி கலை கட்டியது. முதல் மூன்று நான்கு நாட்களில் போட்டியாளர்களிடையே நடந்த போட்டியில் கமல்ஹாசனே வியந்து போய் 40 நாட்களில் நடக்கும் விஷயங்கள் நான்கு நாட்களில் நடக்கிறது என்றெல்லாம் பாராட்டினார். இந்த சமயங்களில் விஜய் டிவியில் இருந்து பங்கேற்ற அமுதவாணன், மைனா, மகேஸ்வரி, ஆயிஷா அமைதியாக இருந்தனர். இதில் முக்கியமாக அமுதவாணன் எல்லோருக்கும் நல்லவரே என்பது போல் எல்லோரையும் சந்தோஷப்படுத்தி கொண்டு ஒரு விகடகவி போல் உள்ளே சுற்றி வந்தார்.

   விக்ரமனை கமல் பாராட்டியதால் பொறாமையால் பொங்கிய அமுதவாணன்

  விக்ரமனை கமல் பாராட்டியதால் பொறாமையால் பொங்கிய அமுதவாணன்

  அசீம், ஆயிஷா, மணிகண்டன், தனலட்சுமி போன்றோர் கண்டபடி நடந்து கெட்ட பெயர் வாங்கிக் கொள்ள, கதிரவன், ராபர்ட் மாஸ்டர், நிவாஷினி உள்ளிட்ட சிலர் மிச்சர் பாட்டிலாக இருக்க, அசல் கோலார் கோளாறு செய்து வெளியேற்றப்பட அமுதவாணன் மிகவும் நல்ல பேரை சம்பாதித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தார். இதே அளவுக்கு பெயரையும் புகழையும் விக்ரமன் பெற்றார். அதற்கு காரணம் பொம்மை டாஸ்க்கில் தனலட்சுமி பாதிக்கப்பட்ட பொழுது விக்ரமன் அசீமை எதிர்த்ததால் அனைவரும் பாராட்டினர். முக்கியமாக கமல் பாராட்டினார். அப்பொழுது முதல் அமுதவாணனுக்கு விக்ரமன் என் மீது பொறாமை ஏற்பட்டது.

   விக்ரமனை குறி வைத்து காய் நகர்த்தும் அமுதவாணன்

  விக்ரமனை குறி வைத்து காய் நகர்த்தும் அமுதவாணன்

  அதன் பின்னர் ஆடல் பாடல் டாஸ்கில் விக்ரமன் ஸ்கிரிப்ட் பெரிதாக பேசப்பட்டது. அதில் முக்கியமான ரோலை நான் செய்கிறேன் என்று அமுதவனன் சொல்ல விக்கிரமன் மறுத்துவிட்டார். அது முதல் இருவருக்கும் ஒரு சில பிரச்சினைகள் ஆரம்பமானது. விக்ரமனின் வளர்ச்சியை பொறுக்க முடியாத அமுதவாணன் அவரை பெரிய போட்டியாக நினைத்து செயல்பட்டு வருகிறார். அமுதவாணனின் கோஷ்டிகளாக தனலட்சுமி, ஜனனி அவ்வப்போது மகேஸ்வரி, மைனா அசீம், கதிரவன், ராபர்ட் மாஸ்டர் என பலரும் இருந்து வருகின்றனர். சீசன் 4 ஆரி போல் விக்ரமன் இந்த சீசனில் ஒதுக்கப்பட்டு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்.

   ஆரியை போல் விக்ரமனை கார்னர் செய்யும் ஹவுஸ் மேட்ஸ்

  ஆரியை போல் விக்ரமனை கார்னர் செய்யும் ஹவுஸ் மேட்ஸ்

  ஆனாலும் அவர் அசராமல் தன்னுடைய பணியை செய்து வருகிறார். ஆரிக்கும், விக்கிரமனுக்கும் உள்ள வித்தியாசம் ஆரி அனைத்து வேலைகளையும் செய்து விடுவார், சுறுசுறுப்பாக இருப்பார், தவறை தட்டி கேட்பார். ஆனால் விக்ரமன் வேலைகள் செய்வதில் சுணக்கம் காரணமாக ஹோம் மேட்ஸ்களிடம் சில நேரம் சிக்குகிறார், மற்றபடி தவறை தட்டி கேட்பதிலும் பேசுவதிலும் கவனம் செலுத்துகிறார். இவை எதையுமே பிடிக்காத அமுதவாணன், விக்ரமன் மீது உள்ள பொறாமையால் கோஷ்டி சேர்த்து வருகிறார்.

   அமுதவாணன் அவ்வளவும் நடிப்பா கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

  அமுதவாணன் அவ்வளவும் நடிப்பா கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

  வழக்கமாக பிக்பாஸ் வீட்டில் விஜய் டிவியின் போட்டியாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். 3, 4 வாரம் அமைதியாக இருந்த விக்கிரமன் தற்போது தலையெடுக்க தொடங்கியுள்ளார். எல்லோரிடமும் வெளிப்படையாக பேசி கோஷ்டி பூசலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். விக்ரமனுக்கு எதிராக செயல்படுகிறேன் என்று தனக்கிருந்த நல்ல பெயரையும் கெடுத்துக் கொள்கிறார் அப்படியானால் 3,4 வாரமும் இவர் நடந்துக்கொண்டது அவ்வளவும் நடிப்பா என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

  English summary
  When he came to the Bigg Boss house, Amudhavanan team, who was a friend with everyone and did not get into any trouble, form the group. Anbu team dominated in season 4 and Priyanka's team dominated in season 5 inside the Bigg Boss house. Amudhavanan is trying to dominate this time just like Vijay TV people dominate.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X