காசு, ஷோ தாண்டி.. தன்மானம் முக்கியம்.. இப்பவே வெளியே போறேன்.. ஜனனி மேட்டரில் அடம்பிடித்த அமுது!

சென்னை: அத்தனை அட்டக்கத்தி வாங்கியும் தலைவன் அசீம் அசால்ட்டா அதையெல்லாம் டீல் பண்ணிட்டு இருக்கும் போது, வில் அம்பு வாங்கியதற்காக அமுதவாணன் போடுற சீன் தாங்க முடியல என பிக் பாஸ் ரசிகர்கள் கன்னாபின்னாவென ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஜனனி அம்பாகவும் அமுதவாணன் வில்லாகவும் செயல்படுகிறார் என ஹவுஸ்மேட்கள் சொன்னதும் அமுதுவுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.

பிக் பாஸ் இப்பவே வீட்டை விட்டு வெளியே போறேன் என்னை அனுப்புங்க என அமுதவாணன் கேமரா முன் நின்று பேசிய காட்சிகள் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளன.

ஜனனி வெறும் அம்பு

ஜனனி வெறும் அம்பு

இலங்கையில் இருந்து வந்த ஜனனி அமுதவாணன் உடன் ஆரம்பத்தில் இருந்தே நல்லதொரு பாண்டிங்கில் அரெஸ்ட் ஆகிவிட்டார். அதனாலே அவரது கேம் வெளியே தெரியாமல் போய் விட்டது என்றும் அமுதவாணன் வில்லாகவும் ஜனனி அம்பாகவும் இருந்து செயல்படுகின்றனர் என வில் அம்பு டாஸ்க் மூலம் விக்ரமன் உள்ளிட்ட ஹவுஸ்மேட்ஸ் வெளுத்து வாங்கி விட்டனர்.

அப்செட்டான அமுது

அப்செட்டான அமுது

விஜய் டிவியின் ப்ராடெக்ட் என்பதால் ரொம்பவே ஆட்டம் போட்டு வந்த அமுதவாணன் இந்த வார இறுதி எபிசோடில் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களால் அசிங்கப்படுத்தப்பட்ட நிலையில், ரொம்பவே அப்செட் ஆகி விட்டார். ஜனனியின் வில் நான் தானா.. நான் ஜனனிக்கூட மட்டும் தான் பேசுறேனா என பொங்கி எழுந்து விட்டார்.

வீட்டுக்குப் போறேன்

வீட்டுக்குப் போறேன்

பிக் பாஸ் இப்பவே கதவை திறந்து விடுங்க நான் என் வீட்டுக்கே போறேன். உங்க ஷோவே வேண்டாம் என அமுதவாணன் கேமரா பார்த்து சொன்ன காட்சிகள் அமுது இதுவரை பண்ண காமெடியிலேயே பெஸ்ட் காமெடி என ரசிகர்களை புரண்டு புரண்டு சிரிக்க வைத்து விட்டது.

தன்மானம் முக்கியம்

தன்மானம் முக்கியம்

காசு, ஷோ எல்லாம் எனக்கு முக்கியமில்லை. தன்மானம் தான் முக்கியம் இப்பவே வெளியே போறேன். ஒண்ணு விக்ரமன் உடன் பேசிய அந்த வீடியோவை போட்டுக் காட்டுங்க இல்லை என்னை வெளியே அனுப்புங்க பிக் பாஸ் என இந்த வாரம் அசீமுக்கு பதிலாக அமுதவாணன் அழுது புலம்பும் காட்சிகள் வெளியாகி உள்ளன. தன்மானம் முக்கியம்னு நினைச்சா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரலாமா அமுதா என நெட்டிசன்கள் வீடியோ மீம்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

கன்ஃபெஷன் ரூமில் கதறல்

கன்ஃபெஷன் ரூமில் கதறல்

சன் டே எபிசோடு முடிந்த பிறகும் கன்ஃபெஷன் ரூமிற்கு சென்று பிக் பாஸிடம் தன்னை தப்பா போர்ட்ரே பண்றாங்க என ஜனனியின் மேட்டரில் இருந்து தப்பிக்க அமுதவாணன் அழுது புலம்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வார வாரம் இப்படியொருத்தர் வெளியே போகணும்னு அழற ஸ்க்ரிப்ட்டை இன்னும் எத்தனை வாரத்துக்கு வைப்பீங்க பிக்பாஸ் டீம் என ரசிகர்கல் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X