அய்யோ முடியல.. அமுது, அமுதுன்னு உருகும் ஜனனி..யார் யாரின் பகடைக்காய்?.. சிக்கும் அமுதவாணன்
பிக்பாஸில் சனிக்கிழமை வந்த கமல் அமுதவாணன் ஜனனி இருவரும் சேர்ந்து இயங்குவது பற்றி பேசினார்.
ஜனனி அமுதவாணனின் பகடைக்காயாக இருக்கிறார், அமுதவாணனும் டாமினேட் செய்கிறார் என்கிற வாதத்தை பற்றி கமல் கேட்டார்.
விக்ரமன், ஷிவின் உள்ளிட்டோர் ஜனனியை அமுதவாணன் பகடைக்காயாக பயன்படுத்துகிறார் என்று தெரிவித்தனர்.

அமுதவாணனின் பகடைக்காயா ஜனனி? - கமல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனிக்கிழமை அன்று கமல்ஹாசன் வந்த பொழுது ஸ்வீட் கடை டாஸ்க் பற்றி பேசப்பட்டது ஸ்வீட் கடை டாஸ்க்கில் அமுதவாணனுடைய செயல்பாடுகள் அவருடைய நடத்தை பற்றி விவாதிக்கப்பட்டது. . அப்பொழுது ஜனனியை பற்றி விக்ரமன் வைத்த ஒரு விமர்சனம் அதற்கு ஜனனி நடத்திய அழுகை நாடகம் பற்றி கமல் லேசாக குறிப்பிட்டு அந்த பிரச்சனையை தொடங்கி வைத்தார். என்ன விக்ரம் ஜனனி அமுதவாணனின் பகடைக்காயாக இருக்கிறாரா என்று கேள்வி கேட்டார்.

ஜனனியை பாதுகாக்கும் அமுதவாணன் - ஷிவின்
பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் ஸ்வீட் கடை டாஸ்க்கில் அமுதவாணன் ஜனனியை பாதுகாப்பாக விளையாடாமல் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டை வைத்தனர். அமுதவாணன் அதைப்பற்றி சொல்லும் பொழுது நான் அப்படி சொல்லவில்லை ராம் விளையாட சென்றார் என்பதால் ஜனனியை விளையாட வேண்டாம் என்று சொன்னேன் என்று சமாளித்தார். ஆனால் கமல் அதை ஏற்றுக்கொள்ளவில்லை ஷிவின் பேசும் பொழுது அமுதவாணன் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஜனனியை டிபன்ஸ் செய்கிறார் ஜனனியை யாரும் எந்த விமர்சனம் செய்யாமல் இடையில் புகுந்து பாதுகாக்கிறார். இதற்கு பெயர் தான் டாமினேஷன் என்று தெரிவித்தார். அமுதவாணனால் மறுக்க முடியவில்லை.

ஜனனியின் போதனைகளால் மதிப்பிழந்த அமுதவாணன்
ஜனனியை கேட்ட பொழுது நான் யாருடைய கைப்பாவையும் கிடையாது நான் நானாக இருக்கிறேன் என்று பதில் அளித்தார். ஹவுஸ் மேட்ஸ்களும் வெளியில் இருப்பவர்களும் அதை நம்ப தயாராக இல்லை. தொடர்ந்து ஜனனி-அமுதவாணன் நெருக்கமாக சுற்றிக் கொண்டிருப்பதும், ஜனனியின் போதனைகளால் அமுதவாணன் தன் இயல்பு நிலையை இழந்து ஜனனி சொல்லும்படி மற்றவர்களுடன் சண்டை போடுவது, முறைப்பது என்று கடந்த வாரங்களில் ஆரம்பித்துள்ளார். அமுதவாணன் முதல் இரண்டு மூன்று வாரங்களில் பிக் பாஸ் வீட்டின் மிக உயர்ந்த மதிப்புமிக்க மனிதராக அனைவரையும் அரவணைத்து செயல்படுவதாக இருந்தார். ஆனால் ஜனனியுடன் சேர்ந்த பின்பு சின்ன பையன் போல் ஜனனி சொல்வதெல்லாம் கேட்டுக்கொண்டு அனைவரையும் முறைப்பது, அவர்களை மட்டம் தட்டுவது என்று பெயரை சுத்தமாக கெடுத்துக் கொண்டு விட்டார். இதை கமலஹாசன் அமுதவாணன் உங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ன பிரச்சனை உங்களுக்கு என்றெல்லாம் சுட்டிக்காட்டி சொன்னார்.

அமுதவாணனை டாமினேட் செய்யும் ஜனனி
ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசன் தனலட்சுமி&கோ மோசடித்தனத்தை சுட்டிகாட்டியபோது அமுதவாணன் உள்ளிட்ட மற்றவர்களையும் கண்டித்தார். மோசடிக்கு துணையாக இருப்பதும் குற்றமே என்று தெரிவித்தார். இதனால் அமுதவாணன் கடும் அப்செட்டானார். இருவருடைய நெருக்கம் பற்றி ஹவுஸ்மேட்ஸ்கள் அங்கங்கே விமர்சனங்களை வைத்தாலும், கமல்ஹாசன் கண்டித்தாலும் இருவரும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக இல்லை. நேற்று கமல்ஹாசன் சென்ற பின் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஜனனி-அமுதவாணனை டாமினேட் செய்து கொண்டிருந்தார். இருவருமே தாங்கள் செய்யும் தவறை உணரவில்லை. தாங்கள் செய்வது தான் சரி என்று நிறைவே பேசிக் கொண்டிருந்தனர்.

சிக்கலை நோக்கி செல்லும் அமுதவாணன்
அமுதவாணன் தன் இயல்பை விட்டு ஜனனியின் கைப்பாவையாக மாறி வருவதை இது காண்பிக்கிறது. அமுதவாணன் ஜனனியை ஆப்ரேட் செய்கிறார் என்று மற்றவர் சொன்னாலும், ஜனனிதான் அமுதவாண்னை முழுதாக இயக்குகிறார், கிட்டத்தட்ட ஜனனியின் கட்டுப்பாட்டில் அமுதவாணன் இருக்கிறார் என்பது போல் தான் இருந்தது. இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பது போல் ஷிவின் அவர்களை பார்த்து பேசி விட்டு சென்றார். அமுதவாணன் தொடர்ச்சியாக இதேபோன்று நடந்தால் அவர் சிக்கலை தேடிக்கொள்வார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











