எமி ஜாக்சன் ரிட்டர்ன்ஸ்.. ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிக்கப்போறாரா.. ஹீரோ யார் தெரியுமா?

சென்னை: தொழிலதிபர் ஜார்ஜ் உடன் நிச்சயம் செய்து கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்த எமி ஜாக்சன் சினிமாவிலிருந்து அதிரடியாக விலகினார்.

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன் மீண்டும் கோலிவுட்டில் ஏ.எல். விஜய் இயக்கத்திலேயே என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜார்ஜுடன் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்த எமி ஜாக்சன் அவரை சமீபத்தில் பிரிந்து விட்டு இன்னொரு நடிகருடன் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

அவள் வந்துவிட்டாள்

அவள் வந்துவிட்டாள்

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அவரது அழகில் மயங்கிய கோலிவுட் ரசிகர்கள் எமி ஜாக்சனுக்கு ரெட் கார்பெட் வரவேற்பை அளித்தனர். தாண்டவம், கெத்து, ஐ, 2.0 மற்றும் தங்கமகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தினார் எமி ஜாக்சன்.

பார்ட்னரை பிரிந்தார்

பார்ட்னரை பிரிந்தார்

தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயுட்டுவுடன் நிச்சயம் செய்து கொண்ட நிலையில், சினிமாவுக்கு அதிரடியாக ரெஸ்ட் கொடுத்து விட்டு அவருடன் ஆண்ட்ரியாஸ் எனும் ஆண் குழந்தையை பெற்றுக் கொண்டு இல்லற வாழ்க்கையை இன்பமாக வாழ்ந்து வந்தார். ஏகப்பட்ட பிகினி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்த எமி ஜாக்சன் மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தை சொன்ன நிலையில், ஏற்பட்ட சண்டையில் இருவரும் பிரிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

அமெரிக்க நடிகருடன் காதல்

அமெரிக்க நடிகருடன் காதல்

அதன் பின்னர் எமி ஜாக்சன் அமெரிக்க நடிகர் எட் வெஸ்ட் விக் உடன் டேட்டிங் செய்து வருவதாக ஏகப்பட்ட போட்டோக்கள் வெளியாகின. இருவரும் லிப் லாக் முத்தங்களை பகிர்ந்து கொண்ட போட்டோக்களை தங்களது சொந்த இன்ஸ்டாகிராம் பக்கங்களிலேயே ஷேர் செய்து காதலை உறுதி செய்தனர். வெளிநாட்டு சினிமா விழாக்களுக்கும் தனது காதலருடன் வலம் வருகிறார் எமி ஜாக்சன்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில்

ஏ.எல். விஜய் இயக்கத்தில்

இங்கிலாந்தின் டிவி தொடர்களில் நடித்து வந்த எமிஜாக்சன் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுவும் எமி ஜாக்சனை அறிமுகப்படுத்திய இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்திலேயே மீண்டும் அவர் நடிக்கப் போகிறார் எனக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அருண் விஜய்க்கு ஜோடி

அருண் விஜய்க்கு ஜோடி

யானை படத்தின் வெற்றிக்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் சினம், அக்னிச் சிறகுகள், பாக்ஸர் உள்ளிட்ட பல படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. இந்நிலையில், அடுத்ததாக அவர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கப்போவதாக கூறுகின்றனர். மீண்டும் எமி ஜாக்சன் கோலிவுட்டுக்கு வந்தால் பழையபடி அவருக்கு விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X