»   »  'இது நம்ம ஆளு' திரைப்படத்திற்கு 50 மதிப்பெண் 'கொடுத்த' ஆனந்த விகடன்! சிம்பு ரசிகர்கள் 'ஷாக்'

'இது நம்ம ஆளு' திரைப்படத்திற்கு 50 மதிப்பெண் 'கொடுத்த' ஆனந்த விகடன்! சிம்பு ரசிகர்கள் 'ஷாக்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'இது நம்ம ஆளு' திரைப்படத்திற்கு ஆனந்த விகடன் விமர்சன குழு 50 மதிப்பெண் கொடுத்ததாக நினைத்து படித்துவிட்டு சிம்பு ரசிகர்கள் ஷாக் ஆனகதை இணையத்தின் விவாத பொருளாகியுள்ளது.

திரைப்படங்களுக்கு ஆனந்த விகடன் விமர்சன குழு வழங்கும் மதிப்பெண்களுக்கு, சினிமாத்துறை மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும். பல நீண்ட காலமாக இந்த போக்கு சினிமாத்துறையில் உள்ளது.


இந்த நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்து, நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று ரிலீசாகியுள்ள 'இது நம்ம ஆளு' திரைப்படத்திற்கு விகடன் எத்தனை மதிப்பெண் தரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது.


Ananda Vikatan said to be given 50 marks for 'Idhu namma aalu' movie

இதனிடையே, ஆனந்தவிகடன் தனது டிவிட்டர் பக்கத்தில், "இது நம்ம ஆளு விகடன் மார்க் - 50/100" என்று குறிப்பிட்டிருந்தது.


வார இதழில்தான் மதிப்பெண் போடுவது வழக்கம் என்பதை கூட மறந்துவிட்ட சிம்பு ரசிகர்கள், அடேங்கப்பா, வழக்கமாக பெரிய ஸ்டார் படங்களுக்கே 40 முதல் 43 மதிப்பெண்தான் சராசரியாக கிடைக்கும். இது நம்ம ஆளு படத்திற்கு 50 மார்க் கிடைத்துள்ளதே என்ற குஷியில் கிளிக் செய்து பார்த்தனர்.


பின்னர்தான் தெரிந்தது, பாக்கியராஜ் நடிப்பில் வெளியாகியிருந்த 'இது நம்ம ஆளு' திரைப்படத்திற்கு அந்த காலத்தில் விகடன் வழங்கிய மதிப்பெண் 50 என்பது. ஷாக்கான ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தங்கள் ஆதங்கத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

English summary
Simbu fans get exited after Ananda Vikatan said to be given 50 marks for 'Idhu namma aalu' movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil