twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பணத்தை எரிக்கக்கூடாது, எம்.எல்.எம் நடத்தக்கூடாது தனலட்சுமியின் தாயாருக்கு அறிவுரை சொன்ன நெறியாளர்

    |

    தனலட்சுமியின் தாயார் தனலட்சுமியைப்போலவே எதையும் ஒப்புக்கொள்ளாமல் பேட்டியில் பதிலளித்தது தனலட்சுமியை பார்ப்பது போலவே இருந்தது.

    தனலட்சுமி பிக்பாஸ் உள்ளே நடப்பது, அவரது இயல்பான குணமா? அவர் சொல்வது உண்மையா என்கிற கேள்வி வைக்கப்பட்டது.

    தனலட்சுமியின் தாயார் நடத்திய சேலைக்கடை மூடப்பட்டது ஏன்? தனலட்சுமி ரூபாயை எரித்தாரா? என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதில் அளித்தார் அவரது தாயார்.

    பிக்பாஸ் வீட்டுக்குள் சொந்தக்கதை சொல்லும் டாஸ்க்கில் தனலட்சுமி சொன்ன கதைகள் வெளியில் விமர்சிக்கப்பட்டது. பலர் அவர் சொன்ன கதை தவறானது. தாயார் குறித்து சொன்னது, தங்கள் குடும்பம் கஷ்டப்படுவதாக சொன்னது அத்தனையும் தவறு, 12000 ரூபாய்க்கு செருப்பு வாங்கியவர், புடவை கடை, சீட்டு பிடித்தல், ஃபைனான்ஸ் என வசதியாக வாழ்பவர்கள் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது.

    Anchor who advised Dhanalakshmis mother not to burn money, not to run MLM

    இதுகுறித்து தனலட்சுமியின் நண்பர்களாக பழகியவர்கள் என சிலர் யூடியூப்களில் கண்டபடி பேட்டிக்கொடுக்க தனலட்சுமி குறித்து பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் இதை வைத்து விவாதம் கிளம்பியது. இதுகுறித்து தனலட்சுமியின் தாயார் தனியார் யூடியூப் சானலுக்கு பேட்டி அளித்துள்ளார். தனலட்சுமி குறித்து அவதூறாக பேட்டி அளித்தவர்கள் மீது முன்னர் போலீஸில் புகார் அளித்து மன்னிப்பு கேட்டு போனார்கள் இப்போது பேட்டி அளித்துள்ளார்கள் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார்.

    புடவைக்கடை வைத்தது உண்மை 2 வருடம் வசதியாக இருந்தோம் அப்புறம் கடையை செயல்பட விடவில்லை என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக உண்மையைச் சொல்ல ஆரம்பித்தார். ஒருவர் புடவை வாங்கினால் அவருக்கு நாங்கள் அடுத்து புடவை இலவசமாக தர ஆரம்பித்தோம் என்றார். குறுகிய காலத்தில் இதற்கு கிடைத்த வரவேற்பு பின்னர் எதிர்ப்பவர்களால் செயல்படுத்த முடியாமல் மூட ப்பட்டதாக சொன்னார். நீங்கள் எம்.எல்.எம் போன்று நடத்தினீர்களா என்று கேட்டார் அதற்கு அவரால் நேரடியாக பதிலளிக்க முடியவில்லை. எம்.எல்.எம் நடத்தக்கூடாது அல்லவா என்று சொன்னார்.

    அடுத்து ரூபாய் நோட்டு எரிக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டதற்கு அது பொம்மை நோட்டுகள் என்று மழுப்பினார். எந்த நோட்டாக இருந்தாலும் நோட்டை எரிப்பதுபோல் காட்டக்கூடாது, அதுவும் அது காந்திப்படம் போட்ட நோட்டும் அது எரிக்கப்பட்டபோது நன்றாக தெரிகிறது என்று நெறியாளர் சொல்ல அதுபற்றி எதுவும் கூற முடியாமல் தடுமாறினார். பின்னர் தனலட்சுமிக்கு நண்பர்கள் தோழிகள் இருக்கிறார்களா என்று கேட்டபோது யாரும் கிடையாது என்று தெரிவித்தார். அதனால் தான் என்னமோ அவளால் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியவில்லையோ என தெரிவித்தார்.

    நட்புகள் இல்லாமல் ஒருவர் இருக்க முடியுமா? அப்படி இருப்பவர் சரியான நபர் அல்ல பிரச்சினை அவரால் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. தனலட்சுமிக்கு தோழிகளே இல்லை என அவரது தாயார் தெரிவித்த அடிப்படையில் தனலட்சுமி பிக்பாஸ் வீட்டுக்குள் சந்திக்கும் பிரச்சினைக்கு அவரது இந்த நடவடிக்கையே காரணமாக அமைகிறது.

    English summary
    It was like watching Dhanalakshmi's mother answering the interview without admitting anything like Dhanalakshmi. Dhanalakshmi walks inside Bigg Boss, her natural personality? It was questioned whether what he was saying was true. Why was the saree shop run by Dhanalakshmi's mother closed? Did Thanalakshmi Burn Rupees? His mother answered the question.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X