»   »  ஸ்டாலினையும் தாலாட்டிய விஜய் சேதுபதியின் 'ஆண்டிப்பட்டி கணவாய் காத்து'

ஸ்டாலினையும் தாலாட்டிய விஜய் சேதுபதியின் 'ஆண்டிப்பட்டி கணவாய் காத்து'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தர்மதுரை படத்தில் வரும் ஆண்டிப்பட்டி கணவாய் காத்து ஆள தூக்குதே பாடல் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் மனதை தாலாட்டிய பாடலாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டு விஜய் சேதுபதி ஆண்டு என்று சொல்லும் அளவுக்கு அவரது படங்கள் ரிலீஸாகி வருகின்றன. இந்த ஆண்டில் இதுவரை அவர் நடிப்பில் 6 படங்கள் ரிலீஸாகியுள்ளன.

Andipatti Kanavai Kaathu soothes MK Stalin

அந்த 6 படங்களுமே ஹிட்டாகியுள்ளன. அதில் ஒன்றான தர்மதுரை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு பிடித்த படமாக அமைந்துள்ளது. தர்மதுரையில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் வரும் ஆண்டிப்பட்டி கணவாய் காத்து ஆள தூக்குதே பாடல் ரசிகர்களை மயங்க வைத்தது.

வீடியோவிலும் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யாவுக்கு பெரிதாக மேக்கப் இல்லை, ஆடம்பர உடைகள் இல்லை, படமாக்கப்பட்ட இடம் அலப்பறையாக இல்லை. இருப்பினும் பாடல் வரிகளும், இசையும், பாடல் காட்சியாக்கப்பட்ட விதமும் அனைவரையும் கவர்ந்துவிட்டது.

இந்நிலையில் ஆண்டிப்பட்டி பாட்டு ஸ்டாலினையும் தாலாட்டியுள்ளது. வைகை அணைப் பகுதியில் உள்ள ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் உண்மையிலேயே காத்து ஆளை தூக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Andipatti Kanavai Kaathu song from Dharmadurai has impressed DMK treasurer MK Stalin.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil