“ஊ சொல்றியா மாமா “ பாட்டை கட்டாயப்படுத்தி பாடவைத்தனர்… ஆண்ட்ரியா மனம் திறந்த பேட்டி !
சென்னை : புஷ்பா படத்தில் வரும் ''ஊ சொல்றியா மாமா " பாடலை கட்டாயப்படுத்தி பாடவைத்ததாக நடிகை ஆண்ட்ரியா மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
இந்த படத்தை பார்க்க போனவர்களை விட சமந்தாவின் நடனத்தையும் பாடலையும் கேட்க சென்றவர்கள் தான் ஏராளம்.
இந்த பாடலுக்கு ஏராளமான ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் ரீல்ஸ் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

புஷ்பா
அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா தி ரைஸ் திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் மெகா ஹிட் அடித்தது. தெலுங்கு மொழியில் மட்டுமல்லாது தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி என பான் இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை வாரிக் குவித்தது.

ஊ சொல்றியா மாமா
இப்படத்தில் திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் வரவேற்பை குவித்தது. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாடல் ஊ சொல்றியா மாமா இப்பாடலுக்கு சமந்தா போட்ட குத்து பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது. பாடல் வரிகள் ஒருபுறம், சமந்தாவின் குத்து டான்ஸ் ஒருபுறம் என புஷ்பா படத்துக்கு செம ரீச் கொடுத்தது. ஹீரோயினாக மட்டுமே அறியப்பட்ட சமந்தா, குத்து டான்ஸுடன் கவர்ச்சியிலும் ஊ சொல்றியா மாமா பாடலில் தாராளம் காட்டியிருந்தார்.

கட்டாயப்படுத்தினார்கள்
இந்நிலையில், நடிகை ஆண்டரியா ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பு தன்னை வியக்க வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பாடலை பாட படக்குழு என்னிடம் கேட்டபோது முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்போது நீங்கள் தான் பாடவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். சரி யோசித்து சொல்றேனு சொன்னேன். பிறகு யோசித்து ஒகே சொன்னேன். பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்ததை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

சமந்தாவுக்கு அதிக சம்பளம்
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற 'வாயா சாமி ' பாடலை விட சமந்தா ஆடிய 'ஊ சொல்றியா மாமா' பாடல் தான் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இந்த ஒரு பாடலில் ஆட நடிகை சமந்தாவிற்கு 1.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. மேலும், திரையரங்கில் இந்த பாடலை ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்டு வந்தனர்.


Click it and Unblock the Notifications











