ஆண்ட்ரியா தங்கைக்கு திருமணம் ஆகிடுச்சு.. வெளிநாட்டு மாப்பிள்ளை எப்படி இருக்காரு பாருங்க!

சென்னை: பிசாசு 2 படத்தின் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியா தனது தங்கையின் திருமணத்தை வெளிநாட்டில் கோலாகலமாக முடித்துள்ளார்.

Recommended Video

பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதிலளிக்காத Andrea | Grand Bridal Jewellery opening

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கை நாடியாவின் திருமண புகைப்படங்களை ஷேர் செய்து வாழ்த்தி உள்ளார்.

ஆண்ட்ரியாவின் போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது தங்கைக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆண்ட்ரியா தங்கைக்கு திருமணம்

ஆண்ட்ரியா தங்கைக்கு திருமணம்

தமிழ் சினிமாவின் ரொம்பவே போல்டான நடிகை ஆண்ட்ரியாவின் தங்கை நாடியாவுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. வெளிநாட்டில் வசித்து வரும் நாடியாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், தங்கையில் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ஆண்ட்ரியா.

வெளிநாட்டு மாப்பிள்ளை

வெளிநாட்டு மாப்பிள்ளை

செட்ரிக் எனும் வெளிநாட்டினரை நடிகை ஆண்ட்ரியாவின் தங்கை நாடியா கிறிஸ்துவ முறைப்படி மோதிரம் மாற்றி திருமணம் செய்துக் கொண்டார். தேவதை போல மணப்பெண் உடையில் நாடியாவும், கோட் சூட் அணிந்து கொண்டு ராயலாக செட்ரிக்கும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

தங்கை இருக்காரா

தங்கை இருக்காரா

கெளதம் மேனனின் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஆண்ட்ரியாவுக்கு இப்படியொரு தங்கை இருக்காரா என ரசிகர்கள் இந்த திருமண புகைப்படங்களை பார்த்து ஷாக் ஆகி உள்ளனர். மேலும், ஆண்ட்ரியாவின் போஸ்ட்டுக்கு கீழ் மணமக்களை வெகுவாக ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

கவர்ச்சி உடையில் நடனம்

கவர்ச்சி உடையில் நடனம்

ஊதாப்பூ நிற கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு நடிகை ஆண்ட்ரியா தனது தங்கையுடன் ஆடிப் பாடும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. மேலும், ஆண்ட்ரியாவின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் புகைப்படமும் ரசிகர்களை பெரிதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிசாசு 2

பிசாசு 2

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், ஆண்ட்ரியாவின் தங்கை திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் லைக்கை அள்ளி வருகின்றன.

புஷ்பா பாடல்

புஷ்பா பாடல்

அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலை பாட ஆரம்பித்த ஆண்ட்ரியா, வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற கற்க கற்க பாடலையும் பாடினார். மேலும், அந்த படத்தின் நாயகி கமாலினி முகர்ஜிக்கு இவர் தான் டப்பிங்கும் கொடுத்தார். உன் மேல ஆசைதான், இதுவரை, பூக்கள் பூக்கும் தருணம், நோ மணி நோ ஹனி, கூகுள் கூகுள் என ஏகப்பட்ட ஹிட் பாடல்களை பாடிய ஆண்டிர்யாவின் குரலில் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தின் ஓ சொல்றியா மாமா பாடல் வேறலெவலில் ஹிட் அடித்தது. புஷ்பா 2 படத்திலும் ஆண்ட்ரியா பாட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X