»   »  ரா ரா ரா.... நயன்தாராவின் ‘டோரா’வுக்குக் குரல் கொடுத்த அனிருத்!

ரா ரா ரா.... நயன்தாராவின் ‘டோரா’வுக்குக் குரல் கொடுத்த அனிருத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இணையத்தைத் திறந்தாலே 'ப்ளூபாய்' அனிருத்தின் வீடியோ புராணம்தான். இந்த களேபரத்துக்கு நடுவே, நயன்தாராவின் டோரா படத்துக்குக் குரல் கொடுத்துள்ளார் அனிருத்.

தாஸ் ராமசாமி இயக்கத்தில், நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் இந்த 'டோரா'.


Anirudh lends voice to Nayanthara's Dora

விவேக் - மெர்வின் இசையமைப்பில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'எங்க போற டோரா' மற்றும் 'வாழ விடு' ஆகிய பாடல்கள் தனித் தனி ட்ராக்காக வெளியாகியுள்ளன.


அடுத்த பாடலுக்குத்தான் அனிருத் குரல் கொடுத்திருக்கிறார். 'ரா ரா ரா' எனத் தொடங்கும் அந்தப் பாடல் அடுத்த வாரம் வெளியாகிறது.


மிகவும் ஆக்ரோஷமான இந்தப் பாடல், தீய சக்திகளை நயன்தாரா எப்படி வெல்கிறார் என்ற காட்சியமைப்பில் உருவாகியிருக்கிறதாம்.


அந்தப் பாடலில் அனிருத்தின் குரலுடன், நயன்தாரா பேசியுள்ள வசனங்களும் இடம்பெற்றுள்ளன.


'டோரா' படத்தின் இசை தொகுப்பினை சோனி மியூசிக் விரைவில் வெளியிடுகிறது.

English summary
Anirudh is lending his voice to Nayanthara's Dora movie song.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil