»   »  அஜித் - சிவாவுடன் மூன்றாவது முறையாக இணையும் அனிருத்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போ?

அஜித் - சிவாவுடன் மூன்றாவது முறையாக இணையும் அனிருத்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போ?

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித்தின் விசுவாசம் படத்தின் இசை அமைப்பாளர் யார்?!

சென்னை : சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் 'விசுவாசம்' படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்கி, தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 'விசுவாசம்' படத்துக்கு இசையமைப்பதற்காக அனிருத்தை ஒப்பந்தம் செய்ய இயக்குநர் சிவா முடிவு செய்துள்ளார்.

முன்பு இசையமைப்பதாக இருந்த யுவன் ஷங்கர் ராஜா படத்திலிருந்து விலகியதையடுத்து, 'விசுவாசம்' படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

யுவன் இசை

யுவன் இசை

விவேகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவாவும் அஜித்தும் இப்படத்தில் ஒன்றிணைகிறார்கள். இதனைத் தொடர்ந்து விசுவாசம் படத்தில் யுவன் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியானது. 'மங்காத்தா', பில்லா 2', 'ஆரம்பம்' ஆகிய படங்களுக்குப் பிறகு அஜித் படத்துக்கு யுவன் இசையமைக்கவிருப்பதால் செம எதிர்பார்ப்பு நிலவியது.

அனிருத் / சாம் சி.எஸ்

அனிருத் / சாம் சி.எஸ்

அஜித் - யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் இணைந்ததால் மகிழ்ச்சியில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா படத்திலிருந்து விலகிவிட்டதாக வெளிவந்த இந்தச் செய்தி கொஞ்சம் அதிச்சியளித்தது. யுவன் படத்திலிருந்து விலகியிருப்பதால் அனிருத் அல்லது சாம் சி.எஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது.

அனிருத் உறுதி

அனிருத் உறுதி

ஆனால், நான் 'விசுவாசம்' படத்தில் இருக்கிறேனா என்பது எனக்கே தெரியாது என்று சாம் சி.எஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அனிருத் ஒப்புக்கொண்டதை அடுத்து பொங்கல் பண்டிகைக்குப் பிறகு ஒப்பந்தத்தில் அனிருத் கையெழுத்திட உள்ளார். அதன்பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

அஜித்துடன் மூன்றாவது முறையாக

அஜித்துடன் மூன்றாவது முறையாக

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த 'வேதாளம்', 'விவேகம்' படங்களைத் தொடர்ந்து 'விசுவாசம்' படத்துக்கும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரியில் 'விசுவாசம்' படப்பிடிப்பு தொடங்குகிறது.

English summary
Director Siva has decided to Anirudh to play music in Ajith's 'Viswasam'. The official announcement of Anirudh musical will be released after Pongal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X