Just In
- 6 min ago
மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்!
- 37 min ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
- 1 hr ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 1 hr ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
Don't Miss!
- News
சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பான வழக்கில் ரிபப்ளிக், டைம்ஸ் நவ் டிவி
- Finance
சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..!
- Sports
அசையக்கூடவில்லை.. பண்ட் - புஜாரா வகுத்த புதிய வியூகம்.. குழம்பிய ஆஸி. பவுலர்கள்.. என்ன நடந்தது?
- Automobiles
போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிராக்டீஸ் வாட் யூ பிரீட்ச்.. பாலாவை கிழி கிழியென கிழித்த அனிதா.. வேற லெவல் நாமினேஷன்!
சென்னை: பிக்பாஸ் வீட்டின் இந்த வார போரிங் பர்ஃபாமராக பாலாவை நாமினேட் செய்த அனிதா, அவரை கிழி கிழியென கிழித்து தொங்கவிட்டார்.
பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் சுவாரசியம் மற்றும் ஈடுபாடு குறைவாக உள்ள இரண்டு போட்டியாளர்களை தேர்வு செய்து ஓய்வறைக்கு அனுப்ப வேண்டும்.
இதற்கான நாமினேஷன் நேற்றைய எபிசோடில் காட்டப்பட்டது. இதில் அனிதா நாமினேஷன் சச்சரவுடனேயே இருந்தது.
பொன்மகள் வந்தாள் டூ மூக்குத்தி அம்மன் வரை.. 2020ல் ஹீரோயின்களை முன்னிலைப்படுத்திய டாப் 10 படங்கள்!

ஃபிரண்ட்லியா இல்லை
இதில் முதலில் ஷிவானியை நாமினேட் செய்த அனிதா, அடுத்து பாலாஜியை நாமினேட் செய்தார். அப்போது பேசிய அவர் இந்த வாரம் முழுக்க ஒரு ஃபிரண்ட்லியாக இல்லாமல் ஆபிசரிடம் வேலை பார்ப்பது போன்று இருந்தது.

பார்ட்ஷியாலிட்டி
கேப்டனாக இருந்த பாலாஜி ஒரு இடத்தில் பார்ஷியாலிட்டி காட்டியதாக கூறினார். அப்போது பாலாஜி என்ன பார்ஷியாலிட்டி என்று கேட்க நான் நாமினேட் பண்ணும் போது குறுக்கிடாதீங்க. யாரெல்லாம் தூங்கினாங்க என்று கேட்ட போது சோம் மற்றும் கேபி பெயரை மட்டும்தான் சொன்னீங்க.

எனக்கு தோனுவதைதான்..
ஷிவானி பெயரை சொல்லாமல் மறைச்சுட்டீங்க என்றார். அதனை மறுத்தார் பாலாஜி. ஆனால் அப்போதும் முகத்தை காட்டிய அனிதா நான் நாமினேட் பண்ணும் போது எனக்கு என்ன தோனுதோ அதைதான் பேச முடியும் என்று எகிறினார்.

தவறாக கன்வே செய்தீர்கள்
தொடர்ந்து பேசிய அனிதா, ஷிவானி கத்திய போது எனக்கு சத்தம் போட்டால் பேனிக் ஆகும் என்றேன். அதை பேனிக் அட்டாக் என்ற தவறாக கன்வே செய்தீர்கள். ஒரு விஷயத்தை கன்வே செய்யும் போது தவறு செய்தீர்கள் என்றார்.

பிராக்டீஸ் வாட் யூ பிரீட்ச்
அப்போதும் பாலாஜி குறுக்கிட, நாமினேட் செய்யும் போது குறுக்கிடக்கூடாதுன்னு கேப்டன் பாலாஜிதான் சொன்னார் ஆனால் அவரே அதை மீறுகிறார் என்ற அனிதா, பிராக்டீஸ் வாட் யூ பிரீட்ச் என்று பாலாஜி ஆரியை அட்டாக் பண்ணிய வார்த்தையை வைத்து விளையாடினார்.

சண்டையின் போது டான்ஸ்
தொடர்ந்து பேசிய அனிதா, வீட்டில் எனக்கும் ஆரிக்கும் இடையில் சண்டை வந்தபோது, நீங்கள் அதை சொல்லி டான்ஸ் ஆடினீர்கள். உங்கள் கேப்டன்ஸியில் வீட்டில் சண்டை நடக்கும் போது நீங்கள் அதை வைத்து டான்ஸ் ஆடுவது அழகல்ல என்றார்.

கிழித்துவிட்ட அனிதா
மேலும் நாமினேட் செய்யும் போது குறுக்கிட கூடாதுன்னு சொல்லிட்டு நீங்களே அதை ஃபாலோ பண்ணல என எல்லாரையும் டாஸ்க்குக்கு சீக்கிரம் வர சொல்லிட்டு நீங்களே தாமதமா வந்தீங்க என்று பாலாஜியின் குறைகளை எல்லாம் எடுத்து சொல்லி கிழித்து விட்டார்.

வேலையை செய்யல
தொடர்ந்து வந்த பாலாஜி, அனிதாவை நாமினேட் செய்தார். அதற்காக கடலை பருப்பு விவகாரத்தை கையில் எடுத்தார். கடலை பருப்பை ஊற வைத்து வீணாக்கி விட்டார். அவங்களுடைய வேலையை செய்ய தவறிட்டாங்க.. அதோட அது ஒரு பெரிய விஷயம் இல்லை என்றும் கூறினார்.

வெறுப்பேற்றிய அனிதா
கிட்சன் டீம் வந்தாலே பிரச்சனைதான் என்றார். அப்புறம் வந்து சாரி சொன்னார். கிட்சன் டீம் கேப்டனாக இருந்து கொண்டு பொறுப்பு இல்லாமல் இருந்தார். யார் தூங்கினாங்க என்று பார்த்த அனிதா, அந்த பொறுப்பை கிட்சனில் காட்டியிருக்கலாம் என்றார். பாலா பேசும்போதே நக்லடித்த அனிதா தேங்க்யூ பாலா தேங்க்யூ பாலா என்று வெறுப்பேற்றினார்.